» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மீன் ஏற்றுமதி தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு : உயிரிழப்பு 5ஆக உயர்வு!
திங்கள் 22, ஜூன் 2026 8:25:35 AM (IST)
பெரியபாளையம் அருகே தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கிச் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் இருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, விபத்தில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது!
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைபேர் கிராமத்தில் தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையின் உற்பத்திப் பிரிவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை எதிர்பாராதவிதமாகப் பயங்கர அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில் அங்குப் பணியில் இருந்த 60 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் உட்பட மொத்தம் 64 தொழிலாளர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மூச்சுத்திணறல் ஏற்பட்டுப் பாதிக்கப்பட்டனர்.
விபத்து நடந்த நேற்று இரண்டு பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியாகினர். மற்றவர்கள் மீட்கப்பட்டுப் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண் இன்று திங்கள்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு பெண்ணும் உயிரிழந்தார்.
சுகாதாரத் துறை விளக்கம்:
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 பேரும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேரும் என மொத்தம் 5 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகத் தமிழ்நாடு சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. மேலும், பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 15 பேரின் உடல்நிலை தற்போதும் கவலைக்கிடமாகவே உள்ளது.
முகாமில் உள்ளவர்களுக்கும் பாதிப்பு:
வாயு கசிவு விபத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகத் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் சுமார் 140 தொழிலாளர்கள் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், அங்கும் நச்சு வாயுவின் தாக்கத்தால் தங்கியிருந்தவர்களில் 2 பேருக்கு திடீரென உடல்நலக் குறைவு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தொழிற்சாலை நிர்வாகத்தின் அலட்சியம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மஞ்சங்காரணை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜுமானி ஜுவான் (19), மலோத்தி (20) ஆகிய 2 பெண் தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். இதற்கிடையே சிகிச்சை பெற்று வரும் வடமாநில தொழிலாளர்களை செயற்கை நுண்ணறிவு துறை அமைச்சர் குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதேபோல் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா, காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. ஷேசாயி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரனீத், எம்.எல்.ஏ.க்கள் விஜயகுமார், ரவி மற்றும் அருண்குமார் ஆகியோர் சென்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
அமோனியா வாயு கசிவு விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிமையாளர்கள் ஜோசப் ஜெகன், மோகன் ஆகியோரையும், மேலாளர் டேனியல் என்பவரையும் கைது செய்தனர். சம்பவ இடத்தில் தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியை உலுக்கிய டொர்னடோ சுழல்காற்று: நடந்தது என்ன? ஆய்வாளர் விளக்கம்!
திங்கள் 22, ஜூன் 2026 12:05:19 PM (IST)

தூத்துக்குடியில் திடீர் சூறாவறளிக் காற்று: விமான நிலைய மேற்கூரை விழுந்து 6 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, ஜூன் 2026 8:23:31 PM (IST)

திருச்செந்தூரில் ரூ.18 கோடியில் புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் ஆய்வு
ஞாயிறு 21, ஜூன் 2026 9:08:48 AM (IST)

கூட்டுப் பாலியல் வன்கொடுமை - கொலை வழக்குகள் : 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
ஞாயிறு 21, ஜூன் 2026 8:55:35 AM (IST)

உள்ளாட்சித் தேர்தலுக்குப் பாரதிய ஜனதா ஆயத்தம் : தூத்துக்குடியில் நிர்வாகிகள் ஆலோசனை!
ஞாயிறு 21, ஜூன் 2026 8:47:19 AM (IST)

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் : டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
சனி 20, ஜூன் 2026 5:19:42 PM (IST)


