» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார் - முதல்வர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி!
புதன் 10, ஜூன் 2026 10:08:42 AM (IST)

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் சினிமாவுக்கு புதியதொரு இலக்கணத்தை எழுதினார். அதுவரை பெரும்பாலும் ஸ்டூடியோவுக்கு உள்ளேயே முடங்கிக் கிடந்த கேமராவை, கிராமத்து வயல்வெளிகளுக்கும், மண் வாசனைக்கும் கொண்டு சேர்த்தார்.
‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’, ‘கருத்தம்மா’ என அவர் இயக்கிய அத்தனை திரைப்படங்களும் தமிழ் சினிமாவின் மைல்கற்களாக அமைந்தன. 'என் இனிய தமிழ் மக்களே' என்ற அவரது குரல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அவரது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய ‘பத்மஸ்ரீ' விருது வழங்கி மத்திய அரசு அவரை கவுரவித்தது. இதுதவிர பல தேசிய, மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களையும், இயக்குநர்களையும் அறிமுகப்படுத்திய ஒரு பல்கலைக்கழகமாக திகழ்ந்தார்.

தமிழ் சினிமாவில் கோலோச்சிய பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா உள்ளிட்ட பலரும் பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வந்தவர்களே. அண்மைக் காலமாக பல்வேறு திரைப்படங்களில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் தனது முத்திரையைப் பதித்தார்.
கடந்த சில நாட்களாக கடும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா, இன்று (ஜூன் 10) அதிகாலையில் காலமானார். அவரது மறைவுச் செய்தி திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஒரங்கிணைப்பாளர் சீமான், நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, ராதிகா உள்பட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு தங்களது இரங்கலை தெரிவித்தனர். மேலும் திரைப்படத் துறையினர், அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டம் : 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்க முதல்வர் விஜய் உத்தரவு
புதன் 10, ஜூன் 2026 11:42:13 AM (IST)

இன்ஸ்டாகிராம் காதலை கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை - போலீஸ் விசாரணை!
புதன் 10, ஜூன் 2026 11:13:43 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 44 காலிப்பணியிடங்கள் : ஜூன் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!
புதன் 10, ஜூன் 2026 11:02:53 AM (IST)

பாதயாத்திரை பக்தர்கள் மீது பஸ் மோதி விபத்து : கொரியர் ஊழியர் பரிதாப பலி
புதன் 10, ஜூன் 2026 8:45:37 AM (IST)

ஜமாபந்தியில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது!
புதன் 10, ஜூன் 2026 8:34:53 AM (IST)

தூத்துக்குடியில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: ரூ.48.75 லட்சம் சுருட்டிய கேரள வாலிபர்கள் 2 பேர் கைது!
புதன் 10, ஜூன் 2026 8:18:44 AM (IST)


