» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் அண்ணாமலை இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம்: பொதுமக்கள் ஆர்வம்!

திங்கள் 8, ஜூன் 2026 5:18:27 PM (IST)



பாஜகவிலிருந்து விலகி அண்ணாமலை தொடங்கியுள்ள  "WE THE LEADERS" புதிய இயக்கத்திற்கான உறுப்பினர் சேர்க்கும் முகாம் திருநெல்வேலியில் நடைபெற்றது.

திருநெல்வேலி நீதிமன்றம் அருகில், டி-மார்ட் வணிக வளாகத்திற்கு எதிரே  "WE THE LEADERS" இயக்கத்தின் அதிகாரப்பூர்வ உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்றது. புதிய அரசியல் மற்றும் சமூக மாற்றத்தை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்த இயக்கத்தில் இணைவதற்காக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் முகாமிற்குத் திரண்டு வந்து தங்களை உறுப்பினர்களாக மிகவும் ஆர்வத்துடன் பதிவு செய்து கொண்டனர்.

இவ்வியக்கத்தின் அடுத்தகட்ட விரிவாக்கப் பணிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மாவட்டத்தின் பிற முக்கியப் பகுதிகளிலும் தொடர்ந்து நடத்தப்படும் என்று முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory