» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை - தென்காசி வழித்தட எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே தகவல்!
திங்கள் 8, ஜூன் 2026 10:56:37 AM (IST)
திருநெல்வேலி (TEN) ரயில் நிலையத்தில் நடைபெறும் நடைமேடை 6 தண்டவாள இணைப்பு மற்றும் யார்டு மேம்பாட்டு பணிகள் காரணமாக பல்வேறு ரயில் சேவைகள் 19.06.2026 முதல் 30.06.2026 வரை வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்
1) 16846 (செங்கோட்டை – ஈரோடு விரைவு ரயில்) பாவூர்சத்திரம்- கடையம் - அம்பாசமுத்திரம்- சேரன்மகாதேவி - கல்லிடைக்குறிச்சி - திருநெல்வேலி - வழியாக செல்வதற்குப் பதிலாக தென்காசி - ராஜபாளையம் - விருதுநகர் வழியாக செல்லும்.
இந்த ரயிலுக்கு விருதுநகர் - தென்காசி வழித்தடத்தில் சங்கரன்கோவில், ராஜபாளையம் மற்றும் சிவகாசி ரயில் நிலையங்களில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
2) 16845 (ஈரோடு – செங்கோட்டை விரைவு ரயில்) கோவில்பட்டி - திருநெல்வேலி - சேரன்மகாதேவி - கல்லிடைக்குறிச்சி - அம்பாசமுத்திரம் - கடையம் - பாவூர்சத்திரம் வழியாக செல்வதற்குப் பதிலாக, விருதுநகர் - ராஜபாளையம் - தென்காசி வழியாக செல்லும்.
இந்த ரயிலுக்கு விருதுநகர் - தென்காசி வழித்தடத்தில் சங்கரன்கோவில், ராஜபாளையம் மற்றும் சிவகாசி ரயில் நிலையங்களில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
3) 20684 (செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயில்) 29.06.2026 அன்றைய தினம் மட்டும் பாவூர்சத்திரம் - அம்பாசமுத்திரம் - கல்லிடைக்குறிச்சி - சேரன்மகாதேவி - திருநெல்வேலி வழியாக செல்வதற்குப் பதிலாக, ராஜபாளையம் - விருதுநகர் வழியாக செல்லும்.
இந்த ரயிலுக்கு சங்கரன்கோவில், ராஜபாளையம் மற்றும் சிவகாசி ரயில் நிலையங்களில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தனிநபர் கடன், கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் ஆனந்த் மோகன் தகவல்!
திங்கள் 8, ஜூன் 2026 5:46:43 PM (IST)

எடப்பாடி பழனிசாமியுடன் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் திடீர் சந்திப்பு!
திங்கள் 8, ஜூன் 2026 5:39:11 PM (IST)

நெல்லையில் அண்ணாமலை இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம்: பொதுமக்கள் ஆர்வம்!
திங்கள் 8, ஜூன் 2026 5:18:27 PM (IST)

ஆட்சி மாறினாலும் அவலங்கள் மாறவில்லை : டியூபர் மாரிதாஸ் கைது: அதிமுக, பாஜக கண்டனம்
திங்கள் 8, ஜூன் 2026 4:38:45 PM (IST)

கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக் கூடாது? உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
திங்கள் 8, ஜூன் 2026 4:16:17 PM (IST)

தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலக ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
திங்கள் 8, ஜூன் 2026 3:54:34 PM (IST)


