» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!
புதன் 3, ஜூன் 2026 10:28:33 AM (IST)

கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி, மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. தி.மு.க. சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி, மரியாதை செலுத்தினார். முன்னதாக அவர் அண்ணா அறிவாலயம் முன்பு கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தி.மு.க. இளைஞரணியின் தலைமை அலுவலகமான அன்பகத்தில் பெரியார். அண்ணா, கருணாநிதி ஆகியோரின் உரு வச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. இந்த 3 தலைவர்களின் சிலைகளை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த கடை உரிமையாளர் கைது!
புதன் 3, ஜூன் 2026 11:23:16 AM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தங்களுக்கு கமிஷனா? – சங்கப் பொருளாளர் மறுப்பு - முதல்வருக்கு கடிதம்!
புதன் 3, ஜூன் 2026 11:14:48 AM (IST)

தமிழகம் முழுவதும் 28 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: ஆளுநரின் செயலராக சஜ்ஜன்சிங் சவான் நியமனம்
புதன் 3, ஜூன் 2026 10:43:39 AM (IST)

தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறப்பு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி!
புதன் 3, ஜூன் 2026 10:11:59 AM (IST)

கார் - டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் பரிதாப பலி; நண்பர் படுகாயம்!
செவ்வாய் 2, ஜூன் 2026 9:56:36 PM (IST)

கல்வி கட்டண விவரத்தைப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்: அரசு அதிரடி உத்தரவு!
செவ்வாய் 2, ஜூன் 2026 5:39:38 PM (IST)


