» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோயில் சிறப்பு நிரந்தர தபால் முத்திரை : அஞ்சல்துறை சார்பில் வெளியீடு

சனி 30, மே 2026 5:31:15 PM (IST)

இந்திய அஞ்சல்துறை சார்பில், வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலுக்கு சிறப்பு நிரந்தர தபால் முத்திரை வெளியிடப்பட்டது.

இந்திய அஞ்சல் துறை சார்பில் கலாச்சார, வரலாற்று மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சிறப்பிக்கும் வகையில் நிரந்தர சித்திர அஞ்சல் முத்திரை  வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு மிக்க அஞ்சல் முத்திரை அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு கடந்த 1978-ல் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் வெளியிட்டது. 

முருகப்பெருமானின் மீதமுள்ள 5 படை வீடு கோயில்களுக்கு நேற்று அஞ்சல் முத்திரை வெளியிடப்பட்டது. இதில், அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சிறப்பு நிரந்தர அஞ்சல் முத்திரை வைகாசி விசாக திருவிழாவான இன்று வெளியிடப்பட்டது. திருச்செந்தூர் தலைமை தபால் அலுவலகத்தில் நடந்த விழாவில் திருச்செந்தூர் அஞ்சல் உப கோட்ட கண்காணிப்பாளர் ஷண்முக ப்ரியா வரவேற்றார். 

விழாவில், தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், திருச்செந்தூர் கோயிலுக்கான சிறப்பு முத்திரையை வெளியிட்டார். தலைமை அஞ்சலக அதிகாரி ரவிமோகன் நன்றி கூறினார். இதில், அஞ்சல் தலை சேமிப்பு ஆர்வலர்கள், பொதுமக்கள், அஞ்சலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

Murugan adimaiமே 30, 2026 - 06:07:26 PM | Posted IP 172.7*****

Tiruchendur murugaruku arogara

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory