» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எம்எல்ஏக்களை விலைபேசும் தவெக: குதிரை பேரத்தை தடுக்க ஆளுநரிடம் அதிமுக அவசர மனு!
சனி 30, மே 2026 3:46:21 PM (IST)

அதிமுக எம்எல்ஏக்களை விலைபேசும் தவெகவின் நடவடிக்கையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்" என்று வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழக ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த முக்கிய சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். இந்த அடுத்தடுத்த அரசியல் மாற்றங்கள் அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் புகைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
தவெக கட்சி நிர்வாகத்தினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டு எம்எல்ஏக்களை இழுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இச்சூழ்நிலையில், குதிரை பேரத்தைத் தடுத்து நிறுத்த ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அனுப்பிய புகார் மனுவை ஆளுநரிடம் அதிமுகவினர் நேரில் வழங்கினர்.
அதிமுக விவசாயப் பிரிவுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ம. தனபால் ஆகியோர் இன்று தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து இந்த மனுவினை ஒப்படைத்தனர். ஆளுநரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: "குதிரை பேரத்தின் மூலமாக அதிமுக எம்எல்ஏக்களை விலைபேசும் தவெகவின் ஜனநாயக விரோத நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என எங்களது பொதுச்செயலாளர் இபிஎஸ் கொடுத்த புகார் மனுவை ஆளுநரிடம் வழங்கியுள்ளோம்.
இது குறித்து ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். தற்போதுள்ள சூழலில் தலைமைச் செயலகத்தையே தவெகவின் கட்சி அலுவலகமாக மாற்றிவிட்டனர்" என்று தெரிவித்தார். எம்எல்ஏக்களின் தொடர் ராஜினாமாவைத் தொடர்ந்து, அதிமுக ஆளுநரிடம் முறையிட்டுள்ள இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோயில் சிறப்பு நிரந்தர தபால் முத்திரை : அஞ்சல்துறை சார்பில் வெளியீடு
சனி 30, மே 2026 5:31:15 PM (IST)

ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
சனி 30, மே 2026 5:23:02 PM (IST)

வட மாநிலத்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கல் - அமைச்சர் மரிய வில்சன் தகவல்!
சனி 30, மே 2026 4:21:11 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ஆய்வு : அமைச்சர் ரமேஷுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கண்டனம்!
சனி 30, மே 2026 12:09:48 PM (IST)

நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மறைவு : முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல்
சனி 30, மே 2026 11:57:20 AM (IST)

சிறுவனிடம் பாலியல் அத்துமீறல் - போக்சோவில் கைதான தலைமை காவலர் அதிரடி பணிநீக்கம்!
சனி 30, மே 2026 10:58:28 AM (IST)


