» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா: சபாநாயகரிடம் கடிதம் அளித்தார்!
செவ்வாய் 26, மே 2026 12:18:14 PM (IST)
அதிமுக சார்பில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, தனது எம்.எல்.ஏ. பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்துள்ளது. எடப்பாடி அணி மற்றும் சண்முகம் அணி என இரு பிரிவாக எம்.எல்.ஏ.க்கள் இருந்து வருகின்றனர். இதில் சண்முகம் தரப்பினர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்தியபாமா, ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அ.தி. மு.க. எம்.எல்.ஏ. ஜெயக்குமார், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் ஆகியோர் நேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரனை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்தனர். பதவியை ராஜினாமா செய்த 3 பேரும் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். இந்த நிலையில், அதிமுக சார்பில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, தனது எம்.எல்.ஏ. பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார். இதற்காக அவர் சென்னை தலைமை செயலகத்துக்கு வருகை தந்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
அந்த கடிதத்தை ஏற்க மறுத்த சபாநாயகர், ராஜினாமா கடிதத்தை கைப்பட எழுதி தருமாறு இசக்கி சுப்பையாவிடம் அறிவுறுத்தினார். இதன் பேரில் இசக்கி சுப்பையா, தனது கைப்பட ராஜினாமா கடிதத்தை எழுதி சபாநாயகரிடம் வழங்கினார். அந்த கடிதத்தை சபாநாயகர் பெற்றுக்கொண்டார். இதன் மூலம் பதவியை ராஜினாமா செய்துள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை தற்போது 4 ஆக அதிகரித்துள்ளது. ராஜினாமா செய்துள்ள இசக்கி சுப்பையா, தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வானிலை மையம் எச்சரிக்கை எதிரொலி: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா?
செவ்வாய் 26, மே 2026 3:38:20 PM (IST)

இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டுமா? முதல்வருக்கு உதயநிதி கேள்வி!
செவ்வாய் 26, மே 2026 12:46:04 PM (IST)

விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி விஞ்ஞான ஏமாற்று வேலை: இபிஎஸ் குற்றச்சாட்டு
செவ்வாய் 26, மே 2026 12:35:29 PM (IST)

விடுதி தோழிகளை செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய பெண் கைது!
செவ்வாய் 26, மே 2026 9:12:05 AM (IST)

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 5 கூடுதல் பெட்டிகள் இணைப்பு: ஜூன் 15 முதல் அமலுக்கு வருகிறது!
செவ்வாய் 26, மே 2026 8:59:21 AM (IST)

அமைச்சர்கள் தங்களின் துறை குறித்து அறிந்து பேச வேண்டும்: தூத்துக்குடியில் சரத்குமார் பேட்டி!
செவ்வாய் 26, மே 2026 8:53:39 AM (IST)


