» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மக்களுக்குக் எனது கைகளால் விருந்து பரிமாறுவேன்! – அமைச்சர் ஆ. ஸ்ரீநாத் அறிக்கை
சனி 23, மே 2026 8:28:00 AM (IST)
தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஆ. ஸ்ரீநாத், தமது சொந்த மண்ணான தூத்துக்குடியில் உள்ள கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தனது கைகளால் நேரில் விருந்து பரிமாறி நன்றி செலுத்துவதற்கான சந்திப்பு நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் ஆ. ஸ்ரீநாத் விடுத்துள்ள உத்தியோகப்பூர்வ செய்திக் குறிப்பு விபரம்: "என் முன்னோர்கள் மற்றும் என் தந்தை வாழ்ந்த பூமி மட்டுமல்லாது, நான் பிறந்து வளர்ந்த இடமும் தூத்துக்குடிதான். இது முழுமையாக எனது சொந்த மண். அப்படிப்பட்ட வீர மண்ணிலிருந்து வந்த ஒரு எளிய தொண்டனை, இன்று மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் அமைச்சராக அமர வைத்துள்ளனர்.இதற்காகத் தூத்துக்குடி மாவட்டப் பொதுமக்களுக்கும், எனக்காகத் தேர்தல் களத்தில் வீதி வீதியாகச் சென்று இரவு பகலாக உழைத்த தமிழக வெற்றிக் கழகத்தின் உன்னதத் தோழர்களுக்கும் நான் என்றென்றும் தார்மீகக் கடமைப்பட்டிருக்கிறேன். அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாகத் தனது சொந்த மாவட்டத்திற்கு வருகை தந்து அனைவரையும் நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதை விளக்கிய அவர்,"தூத்துக்குடியில் உள்ள கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உள்கட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் முதலமைச்சரின் அன்பிற்குப் பாத்திரமான பொதுமக்கள் அனைவரையும் கூடிய விரைவில் நேரில் சந்திக்க உள்ளேன்.
தேர்தல் களத்தில் எனக்காக அயராது உழைத்த தூத்துக்குடி மக்களுக்கு என் சொந்தக் கையால் அன்போடு விருந்து பரிமாற என் மனது ஏங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, கூடிய விரைவில் தூத்துக்குடியில் அனைத்துத் தரப்பு மக்கள் மற்றும் கட்சியினரை ஒன்றிணைத்து ஒரு பெரும் 'சங்கம' சந்திப்பு நிகழ்வாக நாம் அனைவரும் ஒன்றுகூடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி உப்பளங்களில் அரிய வாத்துகளின் சங்கமம்: இயற்கை ஆர்வலர்கள் நெகிழ்ச்சி!
சனி 23, மே 2026 12:49:24 PM (IST)

அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம்!
சனி 23, மே 2026 12:24:05 PM (IST)

மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மாற்றுப் பணி: தமிழ்நாடு அரசு உத்தரவு!
சனி 23, மே 2026 12:18:26 PM (IST)

பதவியேற்ற 12 நாட்களில் 30+ கொடூர சம்பவங்கள்: தவெக அரசு மீது உதயநிதி ஸ்டாலின் சாடல்!
சனி 23, மே 2026 12:11:50 PM (IST)

தேர்தல் வன்முறை விவகாரம்: சேகர்பாபு மீது கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளில் பதிவு!
சனி 23, மே 2026 11:58:56 AM (IST)

தமிழக அரசில் 461 வேலைவாய்ப்புகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 25 கடைசி நாள்!
சனி 23, மே 2026 11:07:23 AM (IST)


