» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: தமிழ்நாடு அரசு உத்தரவு!
புதன் 20, மே 2026 4:31:10 PM (IST)
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பிறப்பிக்கப்பட்டிருந்த குண்டர் தடுப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
பிரபல யூடியூபர் 'சவுக்கு' சங்கர் மீது தொடுக்கப்பட்ட தொடர்ச்சியான அவதூறு வழக்குகள் மற்றும் முந்தைய வழக்குகளின் அடிப்படையில், அப்போதைய சென்னை காவல் ஆணையர் ஏ. அருண், சவுக்கை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து சவுக்கு சங்கர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது பிறப்பிக்கப்பட்டிருந்த குண்டர் தடுப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் வேறு வழக்குகள் ஏதுமில்லை என்றால், அவர் உடனடியாகச் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் 2024-ஆம் ஆண்டு அவர் மீது பதியப்பட்ட குண்டர் சட்டங்களை சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு அலுவலகங்களில் ஆய்வு எனும் பெயரில் தவெகவினர் அத்துமீறல்: தினகரன் குற்றச்சாட்டு
புதன் 20, மே 2026 5:07:09 PM (IST)

சட்டசபையில் விஜய் படத்தை காட்டிய தவெக எம்.எல்.ஏ : சபாநாயகர் கண்டனம் - அவைக்குறிப்பிலிருந்து நீக்கம்!
புதன் 20, மே 2026 4:38:33 PM (IST)

அமைச்சரவையில் அதிமுகவை சேர்த்தால் ஆதரவு வாபஸ்..? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எச்சரிக்கை!
புதன் 20, மே 2026 12:45:39 PM (IST)

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 94.31% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 10:40:33 AM (IST)

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.60% தேர்ச்சி : மாநில அளவில் தூத்துக்குடி 9வது இடம்!
புதன் 20, மே 2026 10:27:09 AM (IST)

தமிழகத்தில் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேச்சு
புதன் 20, மே 2026 8:48:59 AM (IST)


