» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

என் குடும்பத்தைக் கெடுத்ததே அந்த 3 எழுத்து நடிகைதான்.. ரவி மோகன் குற்றச்சாட்டு!

சனி 16, மே 2026 4:20:22 PM (IST)



தனது குடும்ப முறிவிற்குத் திரையுலகைச் சேர்ந்த ஒரு பிரபல நடிகையே காரணம் என்று நடிகர் ரவி மோகன் குற்றம்சாட்டியுள்ளார். 

தனது தோழி கெனிஷா சென்னையை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ள சூழலில், சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி), தனது குடும்ப வாழ்க்கையின் சீரழிவிற்குக் காரணம் திரையுலகைச் சேர்ந்த ஒரு முன்னணி நடிகைதான் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டி, செய்தியாளர்கள் முன்னிலையிலேயே கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் தனது குடும்பப் பின்னணி மற்றும் மனைவி ஆர்த்தி குறித்துப் பேசிய ரவி மோகன் பல திடுக்கிடும் புகார்களை அடுக்கினார்:"ஆர்த்தியும் அவரது குடும்பத்தினரும் என்னைச் சித்திரவதை செய்து, பிளாக்மெயில் செய்து தங்களின் அடிமையாக வைத்திருந்தனர். ஆரம்பத்தில் கையை அறுத்துக் கொண்டு பிளாக்மெயில் செய்துதான் ஆர்த்தி என்னை நாடி வந்து திருமணம் செய்து கொண்டார்.

இத்தனை வருடங்களாக நான் சம்பாதித்த பணத்தை என்னால் சுதந்திரமாகச் செலவு செய்யக் கூட முடியவில்லை. என் பெயரில் ஒரு தனியான வங்கிக் கணக்கு (Bank Account) கூட கிடையாது. ஆர்த்தியின் குடும்ப மருத்துவச் செலவுக்காகக் கூட நான் மாதம் ரூ. 25,000 அனுப்பி வந்துள்ளேன்."
என்று வேதனையுடன் தெரிவித்தார்.

தனது தற்போதைய பொருளாதார நிலை மற்றும் சமூக வலைதள அவதூறுகள் குறித்துப் பேசிய அவர், ஏற்கனவே தன் மீது பல கோடி ரூபாய் கடன்களும், நீதிமன்ற வழக்குகளும் உள்ளதாகக் குறிப்பிட்டார். "இத்தனை துன்பங்கள் இருந்தும் நான் வெளியில் சிரித்தபடிதான் இருந்தேன். ஆனால், தற்போது எனக்கு எதிராக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் வீடியோக்களை எடிட் செய்து தவறான அவதூறுகளைப் பரப்புகிறார்கள். இத்தகைய சைபர் துன்புறுத்தல்களால் (Cyber Bullying) பலர் மனமுடைந்து உயிரிழந்துள்ளனர்" என்றும் சாடினார்.

தனது குடும்ப முறிவிற்குத் திரையுலகைச் சேர்ந்த ஒரு பிரபல நடிகையே காரணம் என்று குறிப்பிட்ட ரவி மோகன்: "என் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் கெடுத்ததே அந்த 'மூன்று எழுத்து' இட்லி நடிகைதான். பின்புலத்தில் இத்தகைய வேலைகளைச் செய்துவிட்டு, வெளியில் வந்து பெரிய அளவில் பெண்ணியம் பேசுகிறார். இவர்களால் எப்படி இப்படி எல்லாம் நிஜ வாழ்க்கையில் நடிக்க முடிகிறது என்றே எனக்குத் தெரியவில்லை." என்று கடுமையான வார்த்தைகளால் சாடினார்.

மேலும், தனக்குக் கஷ்டமான காலங்கள் வந்தபோதெல்லாம் தோழியாகத் தன் அருகில் நின்றவர் கெனிஷா மட்டும்தான் என்றும், நான் அழகுக்காகச் செல்பவன் அல்ல என்றும், தற்போது தேவையற்ற அவமானங்களால் கெனிஷாவைச் சென்னையை விட்டே அனுப்பிவிட்டீர்கள் என்றும் கூறி கதறி அழுதார்.

ஆர்த்தியின் தரப்புப் பதில்:

இதற்கிடையே, ரவி மோகனின் இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் ஆர்த்தி தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "ஒரே நாளில் என்னால் சட்டப்படி விவாகரத்து செய்திருக்க முடியும். ஆனால், எனது பிள்ளைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டே நான் இவ்வளவு காலம் அமைதி காத்தேன். எனது மௌனத்தை யாரும் பலவீனமாகவோ அல்லது தவறாகவோ புரிந்து கொள்ள வேண்டாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையுலகின் நட்சத்திரத் தம்பதிகளாகக் கருதப்பட்ட இவர்களின் இந்த குடும்பப் பிரச்சினை, தற்பொழுது பரஸ்பரக் குற்றச்சாட்டுகளுடன் காவல் மற்றும் நீதிமன்ற எல்லைகளை நோக்கி நகர்வது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory