» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் புரோட்டா சாப்பிட்ட சட்டக்கல்லூரி மாணவர் மர்ம மரணம் - போலீசார் விசாரணை!
சனி 9, மே 2026 8:53:06 AM (IST)
தூத்துக்குடியில் உணவகத்தில் புரோட்டா சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கிய சட்டக்கல்லூரி மாணவர், மறுநாள் காலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் எஸ்.ஜே. ஜெகன் என்பவரது மகன் பிரபாகர் (23). இவர் தூத்துக்குடியில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் மாணவராகப் படித்து வந்தார். கடந்த 7-ம் தேதி இரவு, பிரபாகர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தூத்துக்குடியில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் புரோட்டா வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, இரவு வீட்டிற்கு வந்து தூங்கியுள்ளார்.
நேற்று காலை நீண்ட நேரமாகியும் பிரபாகர் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், உள்ளே சென்று பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பிரபாகர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த வடபாகம் போலீசார், பிரபாகரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரபாகர் சாப்பிட்ட புரோட்டாவினால் ஏற்பட்ட உணவு நஞ்சாதல் காரணமாக உயிரிழந்தாரா? அல்லது அவருக்கு ஏதேனும் உடல்நலக் குறைவு அல்லது அலர்ஜி இருந்ததா? என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மாணவரின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். சட்டக்கல்லூரி மாணவர் திடீரென உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாளை தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கிறார் விஜய்: 9 அமைச்சர்களும் பதவியேற்பு!
சனி 9, மே 2026 7:56:19 PM (IST)

தமிழகத்தின் புதிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து; ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட உறுதி!
சனி 9, மே 2026 5:40:29 PM (IST)

தமிழகத்தின் முதல்வராகிறார் விஜய்: விசிக ஆதரவுடன் ஆட்சி அமைப்பது உறுதி - தொண்டர்கள் உற்சாகம்!
சனி 9, மே 2026 4:39:12 PM (IST)

தமிழகத்தில் அமையவுள்ள புதிய ஆட்சிக்கு வாழ்த்து: எடப்பாடி பழனிசாமி திடீர் சிக்னல்!
சனி 9, மே 2026 3:44:29 PM (IST)

விஜய் முதல்வராவதில் இழுபறி நீடிப்பால் விரக்தி: தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சனி 9, மே 2026 3:10:10 PM (IST)

சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு மரண தண்டனை: போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
சனி 9, மே 2026 12:33:55 PM (IST)


