» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விஜய் முதல்வராவதில் இழுபறி நீடிப்பால் விரக்தி: தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சனி 9, மே 2026 3:10:10 PM (IST)
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் முதல்வர் ஆவதில் இழுபறி நீடித்து வருவதால் மனமுடைந்த அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகேயுள்ள செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் வேலு மகன் இசக்கியப்பன். தவெக நிர்வாகியான இவர் திருநெல்வேலி மாவட்டம் விஸ்வநாதபுரம் அருகே மகாராஜபுரம் சந்திப்பில் இன்று திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அருகில் இருந்தவர்கள் உடனடியாகச் செயல்பட்டு இசக்கியப்பனின் உடலில் பற்றிய தீயை அணைத்தனர். இருப்பினும் அவர் பலத்த தீக்காயமடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பழவூர் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன: இசக்கியப்பன் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி என்பது தெரியவந்துள்ளது. தனது கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
தற்கொலை முயற்சியில் ஈடுபட்டபோது இசக்கியப்பன் மது போதையில் இருந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசக்கியப்பனுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பழவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாளை தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கிறார் விஜய்: 9 அமைச்சர்களும் பதவியேற்பு!
சனி 9, மே 2026 7:56:19 PM (IST)

தமிழகத்தின் புதிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து; ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட உறுதி!
சனி 9, மே 2026 5:40:29 PM (IST)

தமிழகத்தின் முதல்வராகிறார் விஜய்: விசிக ஆதரவுடன் ஆட்சி அமைப்பது உறுதி - தொண்டர்கள் உற்சாகம்!
சனி 9, மே 2026 4:39:12 PM (IST)

தமிழகத்தில் அமையவுள்ள புதிய ஆட்சிக்கு வாழ்த்து: எடப்பாடி பழனிசாமி திடீர் சிக்னல்!
சனி 9, மே 2026 3:44:29 PM (IST)

சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு மரண தண்டனை: போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
சனி 9, மே 2026 12:33:55 PM (IST)

முதல்வராகும் முன்பே, விஜய் போர்ஜரியில் ஈடுபடுகிறார் : டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி!
சனி 9, மே 2026 12:23:27 PM (IST)


