» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நீதிபதி சசிகலா திடீர் இடமாற்றம்! பின்னணி என்ன?

வியாழன் 30, ஏப்ரல் 2026 12:50:15 PM (IST)

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சூழலில், அந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சசிகலா திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

27 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தனது மனுவில் விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும், இது குறித்துக் கேட்டபோது முறையான விளக்கம் அளிக்கவில்லை என்றும் சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வரும் ஜூன் 15, 2026 அன்று விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவரையும் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. விவாகரத்து வழக்கு முடியும் வரை, சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டிலேயே தான் தங்குவதற்கு அனுமதி கோரி சங்கீதா தரப்பில் இடைக்கால மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு விஜய் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்தச் பரபரப்பான சூழலில், வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சசிகலா திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது வழக்கமான நிர்வாக ரீதியிலான இடமாற்றமா அல்லது இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கையா என்பது குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory