» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மூன்றாவது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு: அரசாணையை நிராகரித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:43:33 PM (IST)
அரசு பெண் ஊழியர்களின் மூன்றாவது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், 12 வாரங்கள் மட்டுமே விடுப்பு வழங்கும் அரசின் தற்போதைய அரசாணை நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளது.
வழக்கின் பின்னணி: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் பணியாற்றி வரும் சாய் நிஷா என்பவர், தனது மூன்றாவது பிரசவத்திற்காக 2026 பிப்ரவரி முதல் 2027 பிப்ரவரி வரை ஓராண்டு மகப்பேறு விடுப்பு கோரி விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், "மூன்றாவது பிரசவத்திற்கு 12 வாரங்கள் (சுமார் 3 மாதங்கள்) மட்டுமே விடுப்பு வழங்க முடியும்" என்ற தற்போதைய அரசாணையைக் குறிப்பிட்டு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அவரது கோரிக்கையை நிராகரித்தார். மேலும் ஏப்ரல் மாதத்திற்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு:
இந்த உத்தரவை எதிர்த்து சாய் நிஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார் மற்றும் என். செந்தில்குமார் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், மூன்றாவது பிரசவமும் முதல் இரு பிரசவங்களைப் போலவே வலியும், வேதனையும் அடங்கியதுதான். இதில் பாகுபாடு காட்ட முடியாது.
மூன்றாவது பிரசவத்திற்கு 12 வாரங்கள் மட்டுமே விடுப்பு வழங்க வேண்டும் என்ற அரசின் ஆணை, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளுக்கு எதிரானது. அரசின் இந்த அரசாணை நீதித்துறையைப் பணியாளர்களை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. மனுதாரருக்கு ஓராண்டு காலம் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பு, மூன்றாவது முறையாகத் தாயாகும் அரசுப் பணியாளர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. அரசின் கொள்கை முடிவுகளைக் காட்டிலும், தாயின் ஆரோக்கியம் மற்றும் குழந்தையின் பராமரிப்பு சார்ந்த மனிதநேய அடிப்படையிலான தீர்ப்புகளே மேலோங்கி நிற்கும் என்பதை இந்த உத்தரவு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கருணாஸ் குற்றவாளி: மே 5-இல் தண்டனை அறிவிப்பு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 5:29:47 PM (IST)

வெற்றிச் சான்றிதழுடன் பனையூர் வாருங்கள்: த.வெ.க. வேட்பாளர்களுக்கு விஜய் உத்தரவு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 5:22:33 PM (IST)

வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் கவனம் : முகவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:53:56 PM (IST)

சி.ஆர்.பி.எப் காவலர் பணித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு : இளைஞர்கள் பயன்பெறலாம்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 3:35:16 PM (IST)

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நீதிபதி சசிகலா திடீர் இடமாற்றம்! பின்னணி என்ன?
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:50:15 PM (IST)

திருச்செந்தூர் வைகாசி விசாகம் திருவிழாவிற்கு சிறப்பு ரயில் சேவைகள் இயக்க கோரிக்கை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:02:04 PM (IST)


