» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை : டி.எஸ்.ஆர். சுபாஷ் வலியுறுத்தல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:40:55 PM (IST)

பல்வேறு மாவட்டங்களில் செய்தியாளர்களுக்கு தேர்தல் அடையாள அட்டைகள் வழங்குவதில் பாரபட்சமாக செயல்பட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "பல மாவட்டத்தில் தங்களுக்கு வேண்டிய செய்தியாளர்களுக்கு மட்டுமே அனுமதி அட்டைகள் வழங்குவது கண்டிக்கத்தக்கது. மேலும் இதில் ஏதோ முறைகேடுகள் நடைபெறுவதாகவும் சந்தேகம் எழுகிறது.
மே 4 ஆம் தேதி கண்காணிப்பு பணிகள் உள்ள நிலையில் உடனடியாக தேர்தல் அதிகாரிகள் இதில் தலையிட்டு, பாரபட்சம் காட்டுவதை தடுத்து நிறுத்தி, தகுதி உள்ள அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டுகிறோம். இதே நிலை தொடர்ந்தால், தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதுரை சித்திரைத் திருவிழா: வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:19:58 PM (IST)

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வு : பறக்கும் படைகள் குழு திரும்பப் பெறப்பட்டன!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 11:25:09 AM (IST)

முத்தாலங்குறிச்சி குணவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:36:14 AM (IST)

பஸ் டயரில் சிக்கி 2 வயது பெண் குழந்தை பலி : தந்தை கண் எதிரிலேயே சோகம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:44:42 AM (IST)

மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த புதுப்பெண்: கோவில்பட்டியில் வைரலாகும் புகைப்படம்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:58:43 PM (IST)

யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம்! - மதுரையில் வாக்களித்த மு.க.அழகிரி சூசக பதில்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:47:49 PM (IST)

