» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வெற்றி மீது 100% நம்பிக்கை உள்ளது: சொந்த ஊரில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி பேட்டி!

வியாழன் 23, ஏப்ரல் 2026 10:51:31 AM (IST)



வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்குச் சென்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும்; இந்தத் தேர்தலில் நான் 100% நம்பிக்கையோடு உள்ளேன்," என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் இறுதி இரண்டு நாட்கள் தனது சொந்த மாவட்டமான சேலத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேர்தல் நாளான இன்று, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்திற்கு வந்தார்.

நெடுங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில், பொதுமக்களோடு ஒருவராக வரிசையில் காத்திருந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார். அவருடன் அவரது மனைவி ராதா, மகன் மிதுன் மற்றும் மருமகள் திவ்யா ஆகியோரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:    "வாக்காளர்கள் அனைவரும் எவ்விதத் தயக்கமும் இன்றி வாக்குச்சாவடிக்குச் சென்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து நான் 100% நம்பிக்கையோடு உள்ளேன்" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory