» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோவிலில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சாமி தரிசனம்!

திங்கள் 20, ஏப்ரல் 2026 9:15:02 AM (IST)



திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்த அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்குக் கோவில் நிர்வாகம் மற்றும் அர்ச்சகர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற அவர், மூலவர் சுப்பிரமணிய சுவாமி மற்றும் சண்முகருக்கு நடைபெற்ற சிறப்புப் பூஜைகளில் கலந்து கொண்டு மனமுருகி வழிபட்டார். தரிசனத்திற்குப் பிறகு தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அவர், "புண்ணிய தலமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வழிபாடு செய்ததை பாக்கியமாகக் கருதுகிறேன். இந்தத் திருக்கோவிலின் தெய்வீக ஆற்றலை உணர்ந்ததில் மிகுந்த மகிழ்ச்சி" எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரின் வருகையை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவருடன் பாஜக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory