» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சமூக வலைத்தளங்களில் வெளியான வெளியான ஜன நாயகன் - எச்.வினோத் வேண்டுகோள்!

வெள்ளி 10, ஏப்ரல் 2026 11:18:15 AM (IST)

‘ஜன நாயகன்’ படத்தை யாரும் பகிர வேண்டாம். ஒவ்வொரு காட்சிகளும் பலரின் கனவை சுமந்து வருகிறது என்று படத்தின் இயக்குநர்  எச்.வினோத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ள படம் ‘ஜன நாயகன்’. இப்படம் கடந்த ஜனவரி மாதம் 9-ந்தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் தொடர்பான சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக தற்போதுவரை படம் வெளியாகவில்லை.

இதனிடையே, ‘ஜன நாயகன்’ படத்தின் 5 நிமிட காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது 3 மணி நேர முழு படமும் வெளியானதால் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

‘ஜன நாயகன்’ படம் சமூக வலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் ஹெச்.வினோத் கூறியிருப்பதாவது:-

‘ஜன நாயகன்’ படத்தை யாரும் பகிர வேண்டாம். ஒவ்வொரு காட்சிகளும் பலரின் கனவை சுமந்து வருகிறது. அனைத்து தரப்பினருலும் படக்குழுவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியானதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory