» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காங்கிரஸ் திமுக-வுடன் உறுதியாக இருக்கிறது: விஜய் விமர்சனத்திற்கு டி.கே.சிவக்குமார் பதிலடி!

வெள்ளி 10, ஏப்ரல் 2026 11:07:50 AM (IST)



திமுக-காங்கிரஸ் கூட்டணியை கேலி செய்த, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதிர்ச்சியற்ற தலைவர் என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் விமர்சித்துள்ளார்.

நெல்லை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுக கூட்டணியைக் கடுமையாகச் சாடினார். அவர் பேசுகையில்:    "திமுக கூட்டணி கலகலத்துப் போய் நிற்கிறது. அதன் பாகங்கள் அனைத்தும் தனித்தனியாகப் பிரிந்து கிடக்கின்றன. ஏதோ ஒட்டி வைத்தது போலக் கூட்டணி காட்சியளிக்கிறது. பல கோடிகளைக் கொடுத்துத் தமிழ்நாடு காங்கிரஸைத் திமுக தனது பையில் போட்டுக்கொண்டுள்ளது. ஆனால், உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் நம் பக்கமே நிற்கிறார்கள்," என்று சர்ச்சையைக் கிளப்பினார்.

விஜய்யின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இதற்குத் தனது பாணியில் பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது:"விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி. அவருக்கு அரசியல் பக்குவம் என்பதே கிடையாது. எதைப் பேச வேண்டும் என்ற தெளிவு அவருக்கு இல்லை.

இந்திய தேசிய காங்கிரஸ் எப்போதும் திமுக-வுடன் உறுதியாக இருக்கிறது. ஒருவேளை விஜய் உடன் தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) இருக்கலாம், ஆனால் இந்திய தேசிய காங்கிரஸ் இல்லை. திமுக தலைமையிலான இந்தக் கூட்டணி வரும் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்," என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

தேர்தல் நெருங்கும் வேளையில், தவெக தலைவர் விஜய்யின் நேரடித் தாக்குதலும், அதற்குப் பதிலடியாக காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் கொடுக்கும் விளக்கங்களும் தமிழக அரசியலில் அனலைப் பறக்கவிட்டுள்ளன. விஜய்யின் கருத்தை ஏற்க மறுக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள், அவர் தேர்தல் களத்தில் குழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory