» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கேஸ் சிலிண்டர்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு: ஆட்சியர் இளம்பகவத் தொடங்கி வைத்தார்!

புதன் 1, ஏப்ரல் 2026 5:37:24 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கேஸ் சிலிண்டர்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணியினை மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தொடங்கி வைத்தார்.

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் 23.04.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, வாக்காளர்கள் மத்தியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் புதுமையான முறையில் விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று தொடங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்  க. இளம்பகவத், தலைமை தாங்கினார். பொதுமக்கள் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு உருளைகளின் மீது, "100% தவறாமல் வாக்களிப்போம்" மற்றும் "என் வாக்கு விற்பனைக்கு அல்ல" போன்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை  ஆட்சியர் ஒட்டி தொடங்கி வைத்தார்.

கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் பணியாளர்களிடம் இந்த ஒட்டு வில்லைகளை வழங்கிய ஆட்சியர், ஒவ்வொரு வீட்டிற்கும் சிலிண்டர் கொண்டு செல்லும் போது வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர், தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் எரிவாயு முகமை பிரதிநிதிகள் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory