» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
4 தொகுதிகளிலும் ‘உதயசூரியன்’ சின்னத்தில் ம.தி.மு.க. போட்டி: வைகோ அறிவிப்பு
புதன் 1, ஏப்ரல் 2026 5:21:27 PM (IST)
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட நான்கு தொகுதிகளிலும் 'உதயசூரியன்' சின்னத்திலேயே அக்கட்சி போட்டியிடும் என்று பொதுச் செயலாளர் வைகோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணியில் காங்கிரஸ் (28), தே.மு.தி.க. (10), விடுதலைச் சிறுத்தைகள் (8), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (5), இந்திய கம்யூனிஸ்டு (5), ம.தி.மு.க. (4), ஐ.யூ.எம்.எல் (2), மனிதநேய மக்கள் கட்சி (2), கொ.ம.தே.க. (2) உள்ளிட்ட கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, தி.மு.க. நேரடியாக 164 இடங்களிலும், கூட்டணி கட்சிகளின் உதயசூரியன் சின்ன வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தம் 176 இடங்களில் உதயசூரியன் சின்னம் களம் காண்பது உறுதியாகியுள்ளது. தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர், சீர்காழி (தனி) ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் விவரம்:
- மொடக்குறிச்சி: செந்தில்நாதன்
- மதுரை தெற்கு: பூமிநாதன்
- கடையநல்லூர்: ராஜேந்திரன்
- சீர்காழி (தனி): வழக்கறிஞர் இரா. செந்தில்செல்வன்
முன்னதாக, சீர்காழி தொகுதியில் மட்டும் தனிச் சின்னத்திலும், மற்ற 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில்: "2026 ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மறுமலர்ச்சி தி.மு.கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட சீர்காழி (தனி) தொகுதியிலும் கழக வேட்பாளர் வழக்கறிஞர் இரா. செந்தில்செல்வன் அவர்கள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகிறார் என்பதைத் தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தனிச் சின்னத்தைப் பெறுவதில் நிலவும் தாமதம் மற்றும் தேர்தல் நெருங்கும் சூழலில் புதிய சின்னத்தைப் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் தேர்தல் களத்தில் உதயசூரியன் சின்னத்தின் பலம் 176 தொகுதிகளாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேஸ் சிலிண்டர்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு: ஆட்சியர் இளம்பகவத் தொடங்கி வைத்தார்!
புதன் 1, ஏப்ரல் 2026 5:37:24 PM (IST)

டிடிவி தினகரன் ஏப்ரல் 6 முதல் பிரச்சாரம்: ஏப்.15-ல் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி!
புதன் 1, ஏப்ரல் 2026 5:26:46 PM (IST)

திருநெல்வேலி வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் ஆய்வு
புதன் 1, ஏப்ரல் 2026 4:43:34 PM (IST)

சுற்றுச்சுழல் பாதிப்பில்லாத தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும்: அமைச்சர் கீதா ஜீவன் உறுதி
புதன் 1, ஏப்ரல் 2026 4:01:03 PM (IST)

தேர்தல் விதிமீறல் குறித்து 24மணி நேரமும் புகார் அளிக்கலாம் : ஆட்சியர் தகவல்
புதன் 1, ஏப்ரல் 2026 3:43:13 PM (IST)

த.வெ.க ஆதரவுடன் தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமைக்கும்: மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி
புதன் 1, ஏப்ரல் 2026 12:05:18 PM (IST)
_1775022580.jpg)
