» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி : விஜய் அறிக்கை
வியாழன் 26, மார்ச் 2026 5:46:08 PM (IST)
த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி என்று அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார்.தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி என்று கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாம்பழம் சின்னத்தை முடக்க முடியாது: ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!
வியாழன் 26, மார்ச் 2026 8:21:33 PM (IST)

தமிழகத்தில் இதுவரை ரூ.189 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்: அர்ச்சனா பட்நாயக் தகவல்!
வியாழன் 26, மார்ச் 2026 8:17:01 PM (IST)

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் தர மாட்டோம் : சீமான் பிரச்சாரம்!
வியாழன் 26, மார்ச் 2026 4:39:58 PM (IST)

சமூக ஊடகங்களில் கண்ணியம் காக்க வேண்டும்: ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுறுத்தல்!
வியாழன் 26, மார்ச் 2026 4:14:26 PM (IST)

தவெக விழாவில் நடனமாடிய தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்: : கல்வி அலுவலர் நடவடிக்கை!
வியாழன் 26, மார்ச் 2026 4:06:05 PM (IST)

தூத்துக்குடியில் குடிபோதையில் டேங்கர் லாரி ஓட்டிய ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு – உரிமம் ரத்து!
வியாழன் 26, மார்ச் 2026 3:39:54 PM (IST)

