» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.1.57 கோடி நஷ்டஈடு: தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 24, மார்ச் 2026 12:38:45 PM (IST)

வாகன விபத்தில் இறந்த டெக்னீசியன் குடும்பத்திற்கு ரூ.1.57 கோடி நஷ்டஈடு வழங்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், தெற்கு ஆத்தூர், கிழக்குத் தெருவைச் சேர்ந்த அப்துல் ரசாக் மகன் முகம்மது அப்பாஸ் தஸ்தகீர் (35) என்பவர் பழையகாயல் சிர்கோனியம் நிறுவனத்தில் டெக்னீசியனாக வேலை செய்து வந்தார். அவர் கடந்த 17.02.2022 அன்று அதிகாலை ஆத்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி திருச்செந்தூர் மெயின் ரோட்டில் பொட்டல்காடு விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிராக வந்த வேன் மோதி படுகாயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். 

அவரது இறப்பு குறித்து அவரது மனைவி தமீமா ரோஷன், அவரது பிள்ளைகள் முஹம்மது பைசல், அர்ஷத் அஹமது மற்றும் அவரது தகப்பனார் செய்யது அப்பாஸ் புகாரி தாயார் சித்தி பாத்திமா ஆகியோர்கள் மேற்படி வாகனத்தின் உரிமையாளர் மற்றும் காப்பீட்டுக்கழகமான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி மீதும் ரூ.2கோடி நஷ்டஈடு கேட்டு கோரி தூத்துக்குடி 2வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வி.ரவீந்திரன் மூலமாக வழக்கு தாக்கல் செய்தனர். 

வழக்கை விசாரித்த நீதிபதி எம்.பிரீத்தா இறந்து போனவர் குடும்பத்தினருக்கு வேனின் காப்பீட்டுக்கழகமான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி ரூ.1,57,72,816-ம் அதற்கு மனு தேதி முதல் 7.5% வட்டியும் செலவு தொகையோடு சேர்த்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கில் மனுதாரர் தரப்பில் வக்கில் வி. ரவீந்திரன் ஆஜரானார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory