» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சாத்தான்குளம் வழக்கில் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் : அமைச்சர் ரகுபதி அறிக்கை
செவ்வாய் 24, மார்ச் 2026 8:24:38 AM (IST)
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அதிமுக ஆட்சியில் மூடி மறைக்க முயன்ற உண்மைகள் தற்போது நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் வெளிவந்துள்ளதாகச் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் தொடர்புடைய 9 போலீசாரும் குற்றவாளிகள் என 6 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.கடந்த 2020-ஆம் ஆண்டு இச்சம்பவம் நடந்தபோது, இதனை 'இரட்டைப் படுகொலை' என்று விமர்சித்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்று தொடர் அழுத்தம் கொடுத்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் திமுக வழங்கும் என்று உறுதியளித்ததோடு, சி.பி.ஐ விசாரணை கோரி ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்தார். மேலும், திமுக சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டது."
"கொரோனா காலத்தில் சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம் என்று மார்தட்டிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமிக்குச் சாத்தான்குளம் சம்பவமே சாட்சி. 2020 ஜூன் 22-ல் ஜெயராஜும் பென்னிக்சும் இறந்தபோது, ஜூன் 24 அன்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், போலீசாரால் கொல்லப்பட்டவர்களை 'மூச்சுத்திணறல் மற்றும் உடல்நலக்குறைவால்' இறந்ததாகப் பொய் சொல்லி காவல்துறையினரைக் காப்பாற்ற முயன்றார்.
பாதிக்கப்பட்ட அப்பாவிகளை நோயாளிகளாக்க முயன்ற மனசாட்சியற்ற மனிதர்தான் எடப்பாடி பழனிசாமி. காவல்துறையினர் நடத்திய அந்த கொடூரச் செயலுக்கு ஆதரவாக நின்று, உண்மையைப் பச்சைப்பொய் சொல்லி மறைக்கப் பார்த்தது அன்றைய அதிமுக அரசு."
"அதிமுக ஆட்சியில் மூடி மறைக்க நினைத்த இந்த வழக்கில், நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி சொன்ன பொய்கள் வெட்டவெளிச்சமாகியுள்ளன. குற்றவாளிகளைக் காப்பாற்ற அன்று பொய் சொன்ன பழனிசாமியும் ஒரு வகையில் குற்றவாளிதான். எனவே, உண்மையை மறைக்க முயன்றதற்காக எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்." இவ்வாறு அமைச்சர் ரகுபதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதுபோதையில் லாரி ஓட்டியவருக்கு அபராதம்: ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை!
செவ்வாய் 24, மார்ச் 2026 12:48:06 PM (IST)

விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.1.57 கோடி நஷ்டஈடு: தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 24, மார்ச் 2026 12:38:45 PM (IST)

புதுச்சேரியில் திமுக கூட்டணியில் பிளவு: தனித்துப் போட்டியிட திருமாவளவன் முடிவு
செவ்வாய் 24, மார்ச் 2026 10:52:06 AM (IST)

டிரான்ஸ்பார்மர்கள் திருடிய லாரி ஓட்டுநர் உட்பட 4 பேர் கைது!
செவ்வாய் 24, மார்ச் 2026 8:29:29 AM (IST)

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாரும் குற்றவாளிகள்: நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 23, மார்ச் 2026 5:18:11 PM (IST)

தமிழகத்தில் ‘துரந்தர் 2’ படத்தைத் தடை செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
திங்கள் 23, மார்ச் 2026 5:04:07 PM (IST)


NEW GENERATIONMar 24, 2026 - 08:40:53 AM | Posted IP 104.2*****