» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தந்தை கொலையில் குற்றவாளிகள் பிடிபடாததால் விரக்தி: மகள் தற்கொலை!
திங்கள் 23, மார்ச் 2026 12:34:43 PM (IST)
நெல்லை அருகே விவசாயி கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளைக் காவல்துறை கைது செய்யாததால் மனமுடைந்த அவரது மகள், உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
நெல்லை அருகே நெல்லையப்பபுரத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம் (52), கடந்த 17-ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் 6 நாட்களாகியும் குற்றவாளிகள் எவரும் கைது செய்யப்படாததால், அவரது மகள் பேபி கனி (24) கடும் மன உளைச்சலில் இருந்தார்.
பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தற்காலிக செவிலியராகப் பணியாற்றி வந்த அவர், "அப்பாவின் பிரிவைத் தாங்க முடியவில்லை, கொலையாளிகளும் இன்னும் பிடிபடவில்லை" என உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு நேற்று வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இந்தத் துயரச் சம்பவத்தைக் கண்டித்து, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை முன்பாக உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தந்தை மற்றும் மகள் என அடுத்தடுத்து நிகழ்ந்த மரணங்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது. குற்றவாளிகளைப் பிடிக்க 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனைவரும் திருப்தியடையும் வகையில் தொகுதிப் பங்கீடு அமையும்: பியூஷ் கோயல் உறுதி!
திங்கள் 23, மார்ச் 2026 12:41:53 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
திங்கள் 23, மார்ச் 2026 12:31:04 PM (IST)

பாஜக தலைமை மீது சரத்குமார் அதிருப்தி: அடுத்தகட்ட முடிவை அறிவிப்பதாக எச்சரிக்கை
திங்கள் 23, மார்ச் 2026 12:12:38 PM (IST)

ரயில் மீது கல் வீசினால் 10 ஆண்டு சிறை அல்லது ஆயுள் தண்டனை: தெற்கு ரயில்வே கடும் எச்சரிக்கை!
திங்கள் 23, மார்ச் 2026 10:56:17 AM (IST)

தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க நாம் வென்றாக வேண்டும் - அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!
திங்கள் 23, மார்ச் 2026 10:49:13 AM (IST)

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மார்ச் 26-க்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!
திங்கள் 23, மார்ச் 2026 10:36:36 AM (IST)

