» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரூ.2 லட்சத்திற்கு மேல் முத்திரைத்தாள் வாங்க 'பான் கார்டு' கட்டாயம்: மோசடிகளைத் தடுக்க அதிரடி
திங்கள் 23, மார்ச் 2026 10:31:01 AM (IST)
இனி வரும் காலங்களில் ரூ.2 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பிலான முத்திரைத்தாள்களை வாங்குவதற்குப் பான் கார்டு எண் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரியல் எஸ்டேட் துறையில் நிலவும் கருப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், சொத்து பரிமாற்றங்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும் வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அதிக மதிப்புள்ள முத்திரைத்தாள்கள் வாங்குவோருக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இனி வரும் காலங்களில் ரூ.2 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பிலான முத்திரைத்தாள்களை வாங்குவதற்குப் பான் கார்டு எண் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பில் முத்திரைத்தாள் வாங்குவோரின் விவரங்களை, 'ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா' (Stock Holding Corporation of India) நிறுவனத்திற்குத் தெரிவிக்க வேண்டியது இனி கட்டாயமாகும்.
உயர் மதிப்புள்ள முத்திரைத்தாள்களை வாங்குவோரின் விவரங்கள் அனைத்தும் நேரடியாக வருமான வரித்துறையின் கண்காணிப்பிற்குச் செல்லும் வகையில் விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய விதிமுறைகள் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.
தற்போது நில விற்பனையின் போது, அரசு நிர்ணயித்துள்ள 'வழிகாட்டி மதிப்பை' மட்டும் வங்கி மூலம் செலுத்திவிட்டு, சந்தை மதிப்பிற்கான கூடுதல் தொகையைப் பலரும் ரொக்கமாகவே கைமாற்றுகின்றனர். இத்தகைய முறைகேடுகளைத் தடுக்கவும், சொத்து பரிமாற்றங்கள் முழுவதையும் வங்கி பரிவர்த்தனைக்குள் கொண்டு வரவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம், முத்திரைத்தாள் விற்பனை வாயிலாகவே பெரிய அளவிலான சொத்து பரிமாற்றங்களை வருமான வரித்துறை எளிதாகக் கண்டறிய முடியும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனைவரும் திருப்தியடையும் வகையில் தொகுதிப் பங்கீடு அமையும்: பியூஷ் கோயல் உறுதி!
திங்கள் 23, மார்ச் 2026 12:41:53 PM (IST)

தந்தை கொலையில் குற்றவாளிகள் பிடிபடாததால் விரக்தி: மகள் தற்கொலை!
திங்கள் 23, மார்ச் 2026 12:34:43 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
திங்கள் 23, மார்ச் 2026 12:31:04 PM (IST)

பாஜக தலைமை மீது சரத்குமார் அதிருப்தி: அடுத்தகட்ட முடிவை அறிவிப்பதாக எச்சரிக்கை
திங்கள் 23, மார்ச் 2026 12:12:38 PM (IST)

ரயில் மீது கல் வீசினால் 10 ஆண்டு சிறை அல்லது ஆயுள் தண்டனை: தெற்கு ரயில்வே கடும் எச்சரிக்கை!
திங்கள் 23, மார்ச் 2026 10:56:17 AM (IST)

தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க நாம் வென்றாக வேண்டும் - அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!
திங்கள் 23, மார்ச் 2026 10:49:13 AM (IST)

