» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக கூட்டணியிலிருந்து விலகிய வேல்முருகன் : தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மறுப்பு!
ஞாயிறு 22, மார்ச் 2026 1:26:35 PM (IST)
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவாக ஒருபோதும் இணையாது என்றும் வேல்முருகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதாக அக்கட்சியின் நிறுவனர் வேல்முருகன் அறிவித்துள்ளார். அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவாக ஒருபோதும் இணையாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட்டு, கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் வேல்முருகன் வெற்றி பெற்றார். இந்த முறை தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறியே கூட்டணி முறிவிற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தத் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்புவதாகவும், குறைந்தபட்சம் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் வேல்முருகன் வலியுறுத்தி வந்தார்.
வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு, அரசுப் பணிகளில் தமிழர்களுக்கே 100% முன்னுரிமை, ஜாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட 10 கோரிக்கைகளை திமுக தனது தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தார். இருப்பினும், முதற்கட்ட பேச்சுவார்த்தையில் திமுக தரப்பில் மீண்டும் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் என உறுதியாகத் தெரிவிக்கப்பட்டதால், வேல்முருகன் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.
திமுகவிலிருந்து வெளியேறிய நிலையில், அதிமுக தரப்பில் 2 அல்லது 3 தொகுதிகள் வழங்க முன்வந்துள்ளதாகவும், வேல்முருகனின் 10 கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே, அவர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக எழுந்த யூகங்களுக்கு வேல்முருகன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒருபோதும் இடம்பெறாது; எங்களது அடுத்தகட்ட கூட்டணி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்" என்று அவர் இன்று (மார்ச் 22) தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டின் கதவை உடைத்து 31 பவுன் நகை கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:52:09 AM (IST)

தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதம்: பா.ஜ.க. பிரமுகர்கள் இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு!
ஞாயிறு 22, மார்ச் 2026 8:57:20 AM (IST)

தூத்துக்குடியில் ஓடும் பேருந்தில் பயங்கர தீ விபத்து : 60 பயணிகள் உயிர் தப்பினர்!
ஞாயிறு 22, மார்ச் 2026 8:49:24 AM (IST)

பாஜவில் இருந்து வெளியேற முடிவு? – ஆலோசனைக் கூட்டம் குறித்து சரத்குமார் விளக்கம்
சனி 21, மார்ச் 2026 5:49:53 PM (IST)

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு: 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
சனி 21, மார்ச் 2026 5:06:31 PM (IST)

தமிழகத்தில் குடிநீர் கேன் மற்றும் பாட்டில் விலை உயர்வு: உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு
சனி 21, மார்ச் 2026 4:17:49 PM (IST)

