» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கல்லிடைக்குறிச்சியில் ரமலான் சிறப்புத் தொழுகை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சனி 21, மார்ச் 2026 12:44:36 PM (IST)

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் உள்ள ரஹ்மத் ஜூம்ஆ பள்ளிவாசல் ஈத்கா மைதானத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை இன்று காலை நடைபெற்றது.
புனித ரமலான் மாத நோன்பு நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற இத்தொழுகையை, பள்ளிவாசலின் இமாம் அ. தாஜூத்தீன் முன்னின்று நடத்தினார். அதனைத் தொடர்ந்து, நூருல் ஹிதாயா மகளிர் அரபிக் கல்லூரி முதல்வர் மு. ரஹ்மத் ரபீக் பெருநாளின் சிறப்புகள் குறித்துச் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்.
தொழுகையில் ஜமாத் தலைவர் அ. நாகூர்கனி, செயலர் அ. ஷேக்செய்யது அலி, பொருளாளர் என். அஜிஸ், துணைத் தலைவர் அ. நாகூர் மீரான், தணிக்கையாளர் கே.பி.எஸ். முகம்மது உசேன் உள்பட ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் ஊர் பிரமுகர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்:
தொழுகை நிறைவடைந்ததும், அங்கு குழுமியிருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பரிமாறிக்கொண்டனர். மேலும், ரமலான் மாதம் முழுவதும் நோன்புக் கஞ்சி மற்றும் சஹர் உணவு வழங்க ஏற்பாடு செய்த தன்னார்வலர்கள் மற்றும் உபயதாரர்கள் அனைவருக்கும் ஜமாஅத் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராமதாஸ் - சசிகலா புதிய கூட்டணி அறிவிப்பு: தைலாபுரத்தில் கையெழுத்தான ஒப்பந்தம்!
சனி 21, மார்ச் 2026 12:39:39 PM (IST)

திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்: தனியார் நிறுவனத்திற்கு ரூ. 1 லட்சம் அபராதம்
சனி 21, மார்ச் 2026 8:34:28 AM (IST)

1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு: ஏப்.17 முதல் கோடை விடுமுறை!
வெள்ளி 20, மார்ச் 2026 8:20:18 PM (IST)

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு புதிய நிர்வாகிகள் நியமனம்!
வெள்ளி 20, மார்ச் 2026 5:49:41 PM (IST)

திமுக அரசின் அலட்சியத்தால் மக்கள் பலியாக வேண்டுமா? - நயினார் நாகேந்திரன் சாடல்!
வெள்ளி 20, மார்ச் 2026 5:12:22 PM (IST)

அனுமதி பெறாத வாகனங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது : ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 20, மார்ச் 2026 4:27:46 PM (IST)

