» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு புதிய நிர்வாகிகள் நியமனம்!
வெள்ளி 20, மார்ச் 2026 5:49:41 PM (IST)

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டனர்.
பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா ஆணைக்கிணங்க நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, தூத்துக்குடி மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சோலையப்ப ராஜா, மாநிலத் துணைத் தலைவர் வெற்றிராஜன், மாநில இணைச் செயலாளர் பீட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் புதிய நிர்வாகிகள் முறைப்படி அறிவிக்கப்பட்டனர். அதன்படி, சோலையப்ப ராஜா கௌரவத் தலைவராகவும், வெற்றிராஜன் மாவட்டத் தலைவராகவும், பீட்டர் மாவட்டச் செயலாளராகவும், மாரிமுத்து மாவட்டப் பொருளாளராகவும், அந்தோணி இன்பராஜ் செய்தித் தொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
தீர்மானங்கள்: இக்கூட்டத்தில், வரும் மே 5-ஆம் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு திருவாரூரில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டில் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் ஆயிரக்கணக்கான வணிகர்கள் கலந்துகொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. மேலும், தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழாவை மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் சிறப்பாக நடத்துவது என்றும், மாவட்டச் சங்க வளர்ச்சிக்கு அனைத்துக் கிளைச் சங்கங்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆலோசனைக் கூட்டத்தில் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்புராஜ், வ.உ.சி. மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்கச் செயலாளர் செந்தில்குமார், முன்னாள் செயலாளர் மகேஸ்வரன், முன்னாள் பொருளாளர் ஆனந்த் பொன்ராஜ், துணைத் தலைவர் மாதவன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், பழைய இரும்பு மற்றும் மோட்டார் பார்ட்ஸ் வியாபாரிகள் சங்கச் செயலாளர் செல்லத்துரை, பிரையன்ட் நகர் வியாபாரிகள் நலச் சங்கச் செயலாளர் கண்ணன், பொருளாளர் மணிகண்டன், பிக்அப் தனபாலன் மற்றும் தமிழ்ச்சாலை மேற்குப் பகுதி வியாபாரிகள் நலச் சங்கச் செயலாளர் கே.மோகன்ராம், பொருளாளர் பொன்னம்பலம், துணைத் தலைவர் பெத்துபாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், புதுக்கோட்டை அனைத்து முன்னேற்றச் சங்கச் செயலாளர்கள் கே.பெரியசாமி, ஜி.முருகன், துணைத் தலைவர் பி.என்.பெரியசாமி, அபிநயா ஜுவல்லர்ஸ் கிருஷ்ணமூர்த்தி, சேதுபாதை ரோடு வியாபாரிகள் நலச் சங்கப் பொதுச் செயலாளர் அழகுமுத்து, செயலாளர் பழனி, பிரையன்ட் நகர் - சிதம்பர நகர் வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் ஞானசெல்வம், தூத்துக்குடி மாவட்ட மருந்து விற்பனைச் சங்கத் தலைவர் முனியசாமி, கோவில்பட்டி மாவட்டப் பொருளாளர் மாரியப்பன், இளைஞரணி அமைப்பாளர் எஸ்.எஸ்.முத்து, சிவசந்திரன் மற்றும் சரமாரி உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக அரசின் அலட்சியத்தால் மக்கள் பலியாக வேண்டுமா? - நயினார் நாகேந்திரன் சாடல்!
வெள்ளி 20, மார்ச் 2026 5:12:22 PM (IST)

அனுமதி பெறாத வாகனங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது : ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 20, மார்ச் 2026 4:27:46 PM (IST)

அரசுப் பேருந்து மோதி கோர விபத்து : 11 மாதக் குழந்தை உட்பட 8 பேர் உயிரிழப்பு!
வெள்ளி 20, மார்ச் 2026 3:41:14 PM (IST)

கூட்டணியில் புதிய கட்சிகள் எதுவும் இணைய வாய்ப்பில்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி
வெள்ளி 20, மார்ச் 2026 12:44:44 PM (IST)

மாணவி கொலை வழக்கில் கைதானவருக்கு உச்சபட்ச தண்டனை உறுதி! - கனிமொழி எம்.பி கருத்து!
வெள்ளி 20, மார்ச் 2026 12:00:00 PM (IST)

மாணவி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி? - தென்மண்டல ஐஜி விளக்கம்!
வெள்ளி 20, மார்ச் 2026 11:53:37 AM (IST)

