» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோயில் உண்டியல் வருவாய் ரூ.4.36 கோடி: 1 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி காணிக்கை!

வெள்ளி 20, மார்ச் 2026 7:44:43 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்ச் மாத உண்டியல் காணிக்கையாக ரூ.4.36 கோடி ரொக்கம் மற்றும் ஒரு கிலோவிற்கும் அதிகமான தங்கம் உள்ளிட்டவற்றை பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களால் செலுத்தப்படும் உண்டியல் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, மார்ச் மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி தக்கார் ரா. அருள்முருகன் தலைமையில் கோயில் நிர்வாக அலுவலக அரங்கில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

இணை ஆணையர் க. ராமு முன்னிலை வகித்தார். இந்து சமய அறநிலையத் துறை முதுநிலை கணக்கு அலுவலர் ராஜாராமன், உதவி ஆணையர்கள் ராமசுப்பிரமணியன், மெய்வேல், அலுவலகக் கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வாளர் செந்தில்நாயகி மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்பணியில் கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

உண்டியல் எண்ணப்பட்டதில் ரொக்கம் ரூ. 4,36,87,797, தங்கம்: 1,143 கிராம், வெள்ளி 20,474 கிராம், பித்தளை 91,180 கிராம், தகரம் 9,180 கிராம், செம்பு 12,360 கிராம், வெளிநாட்டு பணத்தாள்கள்  2,071 எண்ணம் இருந்ததாக கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory