» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
வியாழன் 19, மார்ச் 2026 5:08:32 PM (IST)
இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை விஞ்சி, தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிக்கையின்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த ஜவுளி ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு மற்றும் வளர்ச்சி விவரங்கள் வருமாறு:இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 21.84% பங்கினை வகிக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் ஜவுளி ஏற்றுமதி 29% உயர்ந்துள்ளது. ஏற்றுமதி மதிப்பு: 2020-2021 நிதியாண்டில் 6,193.39 மில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதி, 2024-2025 நிதியாண்டில் 7,997.17 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: திராவிட மாடல் ஆட்சியின் 4 ஆண்டுகளில் 29% வளர்ச்சி! குஜராத்தையும் மகாராஷ்டிரத்தையும் பின்னுக்குத் தள்ளித் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. திராவிட மாடல் அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளினால் இந்த உயர்வு சாத்தியமாகியுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டுமே 21.84% பங்களிக்கிறது. இந்தச் சாதனைகளைச் சொல்வது நாமல்ல, மத்திய அரசு! சாதனைகளைச் சொல்லி ஒன்றாக வெல்வோம்!" இவ்வாறு முதல்வர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் வாக்களிக்கலாம் - 12 மாற்று ஆவணங்கள் அறிவிப்பு!
வியாழன் 19, மார்ச் 2026 5:40:58 PM (IST)

தவெக-வுடன் கூட்டணி பேசவில்லை; ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது: நயினார் நாகேந்திரன் பேட்டி!
வியாழன் 19, மார்ச் 2026 4:23:10 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் : கண்காணிப்புப் பணி தீவிரம்!
வியாழன் 19, மார்ச் 2026 4:12:25 PM (IST)

எடப்பாடி கே. பழனிசாமி டெல்லி சென்றால் என்ன தவறு? - தமிழிசை காட்டம்
வியாழன் 19, மார்ச் 2026 3:59:11 PM (IST)

நெல்லையில் தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் ஆய்வு புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு
வியாழன் 19, மார்ச் 2026 3:28:49 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய கிளை திறப்பு விழா
வியாழன் 19, மார்ச் 2026 3:14:59 PM (IST)

