» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கோயிலில் கோடை வெப்பத்தைத் தணிக்க சிறப்பு வசதிகள்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
திங்கள் 16, மார்ச் 2026 7:53:48 AM (IST)
பங்குனி மாதப் பிறப்பு மற்றும் வார விடுமுறை தினத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பங்குனி மாதப் பிறப்பையொட்டி கோயில் நடை அதிகாலையிலேயே திறக்கப்பட்டது. விஸ்வரூப தீபாராதனை மற்றும் உதய மார்த்தாண்ட அபிஷேகம் உள்ளிட்ட கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றன. அதிகாலை முதலே இலவச பொது தரிசனம் மற்றும் ரூ. 100 கட்டண தரிசன வரிசைகளில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர். மூத்த குடிமக்களுக்காகத் தனி வரிசை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வெப்பத்தினால் பாதிக்கப்படாமல் இருக்க, கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராஜகோபுர திருப்பணி மண்டபத்தில் ஏர் கூலர்கள் மற்றும் மின்விசிறி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பங்குனி உத்திரம் - திருக்கல்யாணம்:
திருச்செந்தூர் கோயிலில் முக்கிய விழாக்களில் ஒன்றான பங்குனி உத்திரத் திருவிழா வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்று இரவு முருகப்பெருமான் - வள்ளியம்மன் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற உள்ளதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்டிக்கடைகளில் கூட போதைப் பொருட்கள்: சட்டம் ஒழுங்கு சீரழிவு - பாஜக விமர்சனம்!
திங்கள் 16, மார்ச் 2026 3:57:30 PM (IST)

மாணவி வழக்கில் 5 பேரிடம் டிஎன்ஏ சோதனை: போலீஸ் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 16, மார்ச் 2026 3:46:56 PM (IST)

மதுகுடிக்கப் பணம் கேட்டுத் தகராறு: மகனை அடித்துக் கொன்ற தந்தை கைது!
திங்கள் 16, மார்ச் 2026 11:22:22 AM (IST)

நெல்லை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது
திங்கள் 16, மார்ச் 2026 8:35:34 AM (IST)

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தனியார் நிறுவன மேலாளரிடம் நகை, பணம் பறிப்பு: 2பேர் கைது!
திங்கள் 16, மார்ச் 2026 8:33:28 AM (IST)

ஊருணியில் மூழ்கி 6 வயது சிறுவன் பரிதாப சாவு : நண்பர்களுடன் குளித்தபோது சோகம்!
திங்கள் 16, மார்ச் 2026 8:30:48 AM (IST)

