» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆல் பினிஷ்: சட்டம்- ஒழுங்கு கைமீறி போய் விட்டதா? முதல்வருக்கு ராமதாஸ் கேள்வி!
வெள்ளி 6, மார்ச் 2026 3:49:03 PM (IST)
சட்டம்- ஒழுங்கு கைமீறி போய்விட்டது என்பதைத்தான் முதலமைச்சர் "ஓவர் ஓவர்: என கையசைப்பின் மூலம் தெரிவித்தாரோ…? என பாமக நிறுவனர் ச. ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள கடம்போடு வாழ்வு கிராமத்திற்கு வந்த கும்பல், இருசக்கர வாகனத்தில் சென்ற ஜான் என்ற மாற்றுத்திறனாளியையும், வட இந்தியத் தொழிலாளியையும் அரிவாளால் வெட்டி கொன்ற அக்கும்பல், அவர்களின் இருசக்கர வாகனத்தையும் பறித்துக் கொண்டு தேனீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியது. இதில் 7 பேர் காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜூ என்பவரிடம் கடந்த 3-ஆம் தேதி டாஸ்மாக் கடைக்கு சென்ற ஒரு கும்பல் தகராறு செய்து அரிவாளால் அவரை வெட்டியது.தப்பியோடிய அவரை விடாமல் விரட்டிச் சென்ற கும்பல், வழியில் தென்பட்ட ஆண், பெண்களை அரிவாளால் வெட்டியது. இந்த தாக்குதலில் ராஜூ தவிர, தினேஷ், ராஜேந்திரன், சுப்ரமணியன் ஆகியோர் காயமடைந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, 5 பேரை கைது செய்தனர்.
இதற்கிடையே கோவை, சூலூரில் ஆயுதங்களுடன் இருசக்கர வாகனத்தில் சுற்றிய இருவரை பிடிக்க சென்ற காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்று உடன் இருந்த காவலர்களையும் தாக்க முயன்றதால் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்து அவருடன் மேலும் 4 பேரையும் காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் காங்கிரசுடன் கூட்டணி ஒப்பந்தத்தை முடித்ததை ’ஓவர்’ என கையசைத்ததாக அவர் விளக்கம் அளித்தாலும், அதை வைத்து ‘ஆல் பினிஷ்’ என நான் சொன்னது போல வைரலாக்கிவிட்டனர் என்றார். இந்த மூன்று நிகழ்வுகளும் அடுத்தடுத்து நடைபெற்றுள்ளதால், ‘ஆல் பினிஷ்’ என சட்டம்- ஒழுங்கு கைமீறி போய்விட்டது என்றுதான் எண்ணி வைரலாக்கப்பட்டதோ என்றே எண்ணவைக்கிறது என ராமதாஸ் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட வேண்டும் : அதிமுக வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:51:43 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு சதுரங்கப் போட்டி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:08:41 PM (IST)

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஜூன் 15-ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 20, ஏப்ரல் 2026 3:37:26 PM (IST)

வாக்குப்பதிவு நாள் வரை 144 தடை உத்தரவு: தேர்தல் விதிமுறைகளை மீறினால் 2 ஆண்டு சிறை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 3:19:19 PM (IST)

தென் மாநிலங்களின் ஆதரவு இல்லாமலேயே பாஜக மத்தியில் ஆட்சி அமைக்கும்: வைகோ எச்சரிக்கை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 12:07:56 PM (IST)

திமுகவை எதிர்த்தால்தான் வளர முடியும் என்பது தவறு: விஜய் குறித்து முதல்வர் விளக்கம்!
திங்கள் 20, ஏப்ரல் 2026 11:29:33 AM (IST)

