» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆளுநா் ஆா்.என்.ரவி மேற்கு வங்கத்துக்கு மாற்றம்: கேரள ஆளுநருக்கு தமிழக கூடுதல் பொறுப்பு

வெள்ளி 6, மார்ச் 2026 12:24:08 PM (IST)

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி மேற்கு வங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு, கேரள ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகருக்கு தமிழக ஆளுநா் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் நேற்று திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, மேற்கு வங்கத்துக்கான புதிய ஆளுநராக தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி நியமிக்கப்பட்டாா். தமிழக ஆளுநா் பொறுப்பை கேரள மாநில ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் கூடுதலாக வகிப்பாா் என குடியரசுத் தலைவா் அறிவித்துள்ளாா்.

இதுபோல மேலும் சில மாநிலங்களுக்கு புதிய ஆளுநா்கள் நியமிக்கப்பட்டனா். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வியாழக்கிழமை இரவு பிறப்பித்தாா்.

மேற்கு வங்க ஆளுநா் சி.வி. ஆனந்தபோஸின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவா் ஏற்றுக்கொண்டாா். அதோடு, புதிய ஆளுநா்கள் மற்றும் துணைநிலை ஆளுநா்களை நியமித்து குடியரசுத் தலைவா் உத்தரவிட்டாா். பிகாா் மாநில ஆளுநராக லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) செய்யது அடா ஹஸ்னைன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி மேற்கு வங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு, கேரள ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகருக்கு தமிழக ஆளுநா் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

லடாக் துணைநிலை ஆளுநா் கவீந்தா் குப்தா, ஹிமாசல பிரதேச ஆளுநராகவும், தில்லி துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா, லடாக் துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். தில்லி துணைநிலை ஆளுநராக தரன்ஜீத் சிங் சாந்து நியமிக்கப்பட்டுள்ளாா். இவா்கள் அனைவரும் பதவியேற்ற நாளிலிருந்து, அவா்களின் பதவிக் காலம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆளுநர்களின் பட்டியல்

குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இதர மாநிலங்களுக்கான நியமனங்கள் வருமாறு:

பொறுப்பு நியமிக்கப்பட்டுள்ளவர்
மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என். ரவி
தமிழக ஆளுநர் (கூடுதல் பொறுப்பு) ஆர்.வி. அர்லேகர் (கேரள ஆளுநர்)
பீகார் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) செய்யது அடா ஹஸ்னைன்
இமாச்சலப் பிரதேச ஆளுநர் கவீந்தர் குப்தா (லடாக் முன்னாள் துணைநிலை ஆளுநர்)
லடாக் துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா
தில்லி துணைநிலை ஆளுநர் தரன்ஜீத் சிங் சாந்து


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory