» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக ஆட்சியை வீழ்த்த 99.9% தொண்டர்கள் இணைந்துவிட்டோம் : டிடிவி தினகரன்
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 4:23:04 PM (IST)
மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மற்றும் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்துப் பல்வேறு முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வருகிற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நான் நேரடியாகப் போட்டியிடப் போவதில்லை. அதிமுக மற்றும் அமமுக ஆகிய இரு கட்சிகளும் மேல்மட்டம் முதல் அடிமட்டம் வரை தற்போது ஒற்றுமையாகச் செயல்பட்டு வருகின்றன. அமமுகவிற்கான தொகுதிகள் குறித்து பாஜக முன்னிலையில் அதிமுகவுடன் பேசி, சுமூகமான முறையில் இறுதி செய்யப்படும்.தற்போது பிரிந்துள்ளவர்கள், தனித்து விடப்பட்டவர்கள் மற்றும் விலகி இருப்பவர்கள் (ஓபிஎஸ், சசிகலா ஆகியோரின் பெயரைக் குறிப்பிடாமல்) நிச்சயமாகத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவார்கள் என நம்புவதாகத் தெரிவித்தார்.
"யாரோ ஒரு சிலர் ஒதுங்கி இருப்பதால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது; ஒதுங்கி இருப்பவர்கள் விரைவில் எங்கள் பக்கம் வருவார்கள். தீய சக்தியான திமுக ஆட்சியை வீழ்த்தி, தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் அவர்கள் எங்களுடன் இணைவார்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்களில் 99.9 சதவீதம் பேர் தற்போது ஒன்றாக இணைந்து விட்டோம். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சுமார் 40 தொகுதிகள் வரை கேட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்வாறு அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுக ஆட்சி அமைந்தால் குடும்பத்திற்கு ரூ.10,000 நிதியுதவி: எடப்பாடி பழனிசாமி அதிரடி வாக்குறுதி
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 12:33:13 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி வருகை: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 12:12:00 PM (IST)

நெல்லையில் கல்லூரி பேருந்து மோதி விபத்து: பள்ளி மாணவி உயிரிழப்பு!
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 11:47:09 AM (IST)

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 23, பிப்ரவரி 2026 9:06:08 PM (IST)

சென்னை - தூத்துக்குடி இடையே கூடுதல் விமான சேவை: மார்ச் 29ல் தொடக்கம் - இன்டிகோ அறிவிப்பு !
திங்கள் 23, பிப்ரவரி 2026 8:24:24 PM (IST)

தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள்: 4.23 லட்சம் பெயர்கள் நீக்கம்
திங்கள் 23, பிப்ரவரி 2026 5:14:37 PM (IST)

