» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒடிசாவிலிருந்து லாரியில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது

வியாழன் 19, பிப்ரவரி 2026 8:32:34 AM (IST)

ஒடிசா மாநிலத்திலிருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 5 பேரைக் கைது செய்தனர்.

ஒடிசாவிலிருந்து தென்காசிக்கு கஞ்சா கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, மாவட்ட தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். குத்துக்கல்வலசையிலிருந்து கணக்கப்பிள்ளைவலசை செல்லும் சாலையோரம் நின்ற மதுரையிலிருந்து வந்த லாரியில் சோதனையிட்டனர். அங்கிருந்த நெட்டூர் பகுதியைச் சேர்ந்த இசக்கிகுமாரிடமிருந்து 4 நபர்கள் கஞ்சா பொட்டலங்களை வாங்க முயன்றபோது போலீசார் அவர்களைச் சுற்றி வளைத்தனர்.

இசக்கிகுமார், அம்பை பகுதியைச் சேர்ந்த நயினார் விக்னேஷ், ராஜாராம், நெட்டூர் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து மற்றும் அய்யனார்குளம் பகுதியைச் சேர்ந்த மனோரஞ்சித் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா, லாரி, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory