» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சொந்தக் கட்சிக்கே கால்ஷீட் கொடுக்கும் ஒரே தலைவர் விஜய் : மதுக்கூர் ராமலிங்கம் விமர்சனம்!

செவ்வாய் 17, பிப்ரவரி 2026 7:53:31 AM (IST)

சினிமா படங்களுக்கு கால்ஷீட் கொடுப்பது போல, தான் தொடங்கியுள்ள சொந்தக் கட்சிக்கே 'கால்ஷீட்' கொடுத்துச் செயல்படும் ஒரே தலைவர் விஜய் ஒருவர்தான்" என மதுக்கூர் ராமலிங்கம் கடுமையாக விமர்சித்துள்ளார். 

கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க மற்றும் நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5,000 வழங்கப்பட்டவுடன் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர். 

நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் கட்சியின் கொள்கைகள் என்னவென்றே இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. விஜய்யின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; ஆனால், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசுவது தவறானது. அதேபோல், நடிகை குறித்து நயினார் நாகேந்திரன் பேசிய கருத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். சினிமாவிற்குப் போவது போல, அரசியலுக்கும் 'கால்ஷீட்' கொடுத்துச் செயல்படும் ஒரே தலைவர் விஜய் தான்."

தனித்து நின்று ஆட்சி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். மறுபுறம் முதன்முறையாக ஆட்சிக்கு வருவோம் என பாஜகவினர் பேசி வருகின்றனர். ஒருவேளை எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றாலும், அது அதிமுக ஆட்சியாக இருக்காது; மறைமுகமாக அது பாஜக ஆட்சியாகவே இருக்கும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory