» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புதுச்சேரியிலும் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு: தொண்டர்கள் உற்சாகம்!
திங்கள் 16, பிப்ரவரி 2026 5:45:53 PM (IST)
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட பொதுச் சின்னம் ஒதுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. விசில், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, சாம்பியன் கோப்பை போன்ற 10 விருப்ப சின்னங்களை பட்டியலிட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் தமிழக பேரவைத் தேர்தலில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகத்துக்கு 234 தொகுதிகளிலும் பொதுச் சின்னமாக விசில் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். தொடர்ந்து இன்று புதுச்சேரியிலும் தேர்தலில் போட்டியிட தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் தேர்தலிலேயே விஜய் தலைமையிலான தவெக பொதுச் சின்னத்தில் போட்டியிட உள்ளது. இதனை தவெக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாபெரும் காதுகுத்து விழா: வினோத அழைப்பிதழுடன் பேரவைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 12:06:48 PM (IST)

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு: இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 11:03:17 AM (IST)

வங்கியில் தீ விபத்து : முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்! பணம், நகைகளுக்கு சேதம் இல்லை!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:16:58 AM (IST)

நெல்லையில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:11:14 AM (IST)

எந்தவொரு வாக்காளரும் விடுபடாத வகையில் தீவிர கண்காணிப்பு: திமுக செயற்குழுவில் தீர்மானம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 7:59:41 AM (IST)

சொந்தக் கட்சிக்கே கால்ஷீட் கொடுக்கும் ஒரே தலைவர் விஜய் : மதுக்கூர் ராமலிங்கம் விமர்சனம்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 7:53:31 AM (IST)

