» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகம் முழுவதும் நாளை முதல் டாஸ்மாக் காலவரையற்ற மூடல்: ஊழியர்கள் முடிவு!
திங்கள் 16, பிப்ரவரி 2026 3:18:42 PM (IST)
தமிழகத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் பணியாளர்கள் நாளை (பிப்ரவரி 17) முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் சுமார் 23,000 பணியாளர்கள் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்தல், காலமுறை ஊதியம் (Pay Scale) வழங்குதல், ஓய்வூதியப் பலன்களை உறுதி செய்தல், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி வருகின்றனர்.
சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதல் பல்வேறு கட்டக் காத்திருப்புப் போராட்டங்களை நடத்தி வந்தன. இருப்பினும், 14 நாட்களாகத் தொடரும் இந்தப் போராட்டம் குறித்துத் தமிழக அரசு இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால், போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
இது தொடர்பாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரிடம் முறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி: இன்று (பிப்ரவரி 16) இரவு 10 மணிக்குக் கடைகளை மூடியவுடன், அதன் சாவிகளை நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர். நாளை (பிப்.17) முதல் பணிக்குச் செல்லாமல் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
அடையாளப் போராட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் காலி பாட்டில் ஸ்டிக்கர்களை ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 4,749 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. அரசுக்குக் கோடிக்கணக்கான வருவாயை ஈட்டித் தரும் இந்தத் துறையில், ஊழியர்களின் நீண்ட காலக் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாததே இந்தப் போராட்டத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
"இவ்வளவு காலம் உழைத்தும் எங்களைப் பணி நிரந்தரம் செய்ய அரசு முன்வராதது வேதனையளிக்கிறது. வேறு வழியின்றிப் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்" எனத் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாபெரும் காதுகுத்து விழா: வினோத அழைப்பிதழுடன் பேரவைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 12:06:48 PM (IST)

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு: இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 11:03:17 AM (IST)

வங்கியில் தீ விபத்து : முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்! பணம், நகைகளுக்கு சேதம் இல்லை!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:16:58 AM (IST)

நெல்லையில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:11:14 AM (IST)

எந்தவொரு வாக்காளரும் விடுபடாத வகையில் தீவிர கண்காணிப்பு: திமுக செயற்குழுவில் தீர்மானம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 7:59:41 AM (IST)

சொந்தக் கட்சிக்கே கால்ஷீட் கொடுக்கும் ஒரே தலைவர் விஜய் : மதுக்கூர் ராமலிங்கம் விமர்சனம்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 7:53:31 AM (IST)

