» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் சி.மதன் பொறுப்பேற்பு
திங்கள் 16, பிப்ரவரி 2026 12:57:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று புதிய காவல் கண்காணிப்பாளராக டாக்டர் சி.மதன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த என்.சிலம்பரசன், சென்னை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் உதவித் தலைமை காவல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, திருநெல்வேலி மாநகர மேற்கு பகுதி துணை ஆணையராக இருந்த டாக்டர் சி.மதன், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் சி.மதன் இன்று பொறுப்பேற்றுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது "காவல்துறை அடிப்படை பணிகள் குற்றம் தடுப்பு, புலனாய்வு பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தப்படும். வருகிற சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெற அரசியல் சார்பின்றி தேர்தல் விதிகள் கடுமையாக கடைபிடிக்கப்படும்.
பொதுமக்கள் சட்ட விதிமுறைகளை முறைப்படி கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது தனி மனித கடமை. குற்றவாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு குற்றங்களை தடுக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை செயல்படும் என்று தெரிவித்தார். முன்னதாக மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்கள் திபு மற்றும் ஆறுமுகம், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமையொருபாகம் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து புதிய எஸ்பி-யை வரவேற்றனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாபெரும் காதுகுத்து விழா: வினோத அழைப்பிதழுடன் பேரவைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 12:06:48 PM (IST)

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு: இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 11:03:17 AM (IST)

வங்கியில் தீ விபத்து : முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்! பணம், நகைகளுக்கு சேதம் இல்லை!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:16:58 AM (IST)

நெல்லையில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:11:14 AM (IST)

எந்தவொரு வாக்காளரும் விடுபடாத வகையில் தீவிர கண்காணிப்பு: திமுக செயற்குழுவில் தீர்மானம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 7:59:41 AM (IST)

சொந்தக் கட்சிக்கே கால்ஷீட் கொடுக்கும் ஒரே தலைவர் விஜய் : மதுக்கூர் ராமலிங்கம் விமர்சனம்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 7:53:31 AM (IST)

