» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புதுச்சேரியில் ரூ.5,396 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்: முதல்வா் ரங்கசாமி தாக்கல் செய்தாா்
வெள்ளி 13, பிப்ரவரி 2026 10:40:17 AM (IST)
புதுச்சேரி அரசின் அடுத்த 5 மாத கால செலவினங்களுக்காக ரூ.5,396 கோடி மதிப்பிலான இடைக்கால பட்ஜெட்டை (Vote on Account) முதல்வர் என். ரங்கசாமி வியாழக்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளதால், சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. இதன் காரணமாக, 2026-27-ஆம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தற்போது தாக்கல் செய்ய இயலாத சூழல் நிலவுகிறது.எனவே, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான முதல் 5 மாத கால அரசின் அத்தியாவசியச் செலவினங்களைச் சமாளிக்க இந்த இடைக்கால பட்ஜெட் கொண்டு வரப்பட்டது.வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும், நிதித்துறைப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் என். ரங்கசாமி ரூ.5,396 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டைச் சமர்ப்பித்தார். இதனைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் ஆர். செல்வம் பட்ஜெட் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தி அவையின் ஒருமனதான ஒப்புதலைப் பெற்றார்.
கூடுதல் செலவினங்கள்: நடப்பு 2025-26 ஆம் நிதியாண்டில் பல்வேறு அரசுத் துறைகளில் ஏற்பட்ட கூடுதல் செலவினங்களுக்காக ரூ.537.38 கோடிக்கு முதல்வர் ரங்கசாமி கோரிய ஒப்புதலுக்கும் பேரவை அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து பல்வேறு தணிக்கைத் துறை அறிக்கைகள் மற்றும் ஏடுகள் அவையில் சமர்ப்பிக்கப்பட்டன.
சட்டப்பேரவை காலவரையன்றி ஒத்திவைப்பு
பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு உரையாற்றிய பேரவைத் தலைவர் ஆர். செல்வம், "மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்காக எனது அதிகார வரம்பிற்கு உட்பட்டு பணியாற்றியுள்ளேன். முதல்வர் ரங்கசாமியின் ஆலோசனையின்படி மத்திய அமைச்சர்களைச் சந்தித்து மாநிலத் திட்டங்களுக்கான நிதியுதவிகளைப் பெற்றுள்ளோம். 16-வது சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், எதிர்காலத்திலும் மக்கள் நலனுக்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து காலை 11.55 மணிக்கு சட்டப்பேரவை நடவடிக்கைகளை நிறைவு செய்த பேரவைத் தலைவர், அவையைக் காலவரையன்றி ஒத்திவைப்பதாக அறிவித்தார். சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் அமையவுள்ள புதிய அரசு, 2026-27-ஆம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியத் துறைமுக வரலாற்றில் மைல்கல்: வ.உ.சி. துறைமுக ஆணையம் சார்பில் ஏஐ அமர்வு!
புதன் 18, பிப்ரவரி 2026 5:22:09 PM (IST)

திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவி மீதே தாக்குதல்: காவல்துறைக்கு இபிஎஸ் கண்டனம்!
புதன் 18, பிப்ரவரி 2026 3:41:47 PM (IST)

நடுரோட்டில் கொதிக்கும் எண்ணெய்.. ஆக்கிரமிப்பு பிடியில் விளாத்திகுளம் சாலைகள்: கிராம மக்கள் அவதி!
புதன் 18, பிப்ரவரி 2026 3:22:22 PM (IST)

நீதிமன்றத்தில் அண்ணாமலை குறுக்கு விசாரணை: 2 கப்பல்கள் வாங்கியதை ஒத்துக்கொண்ட டி.ஆர்.பாலு!
புதன் 18, பிப்ரவரி 2026 11:29:00 AM (IST)

ஆட்சியில் பங்கு என்பது குறித்து தலைமையிடம் ஏற்கெனவே பேசிவிட்டேன்: மாணிக்கம் தாகூர்
புதன் 18, பிப்ரவரி 2026 11:20:32 AM (IST)

தேவாலய நுழைவுவாயில் கட்டுவதில் மோதல்: 6 பேர் மீது வழக்குப்பதிவு; வீடியோ வைரல்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:26:34 PM (IST)

