» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தேவாலய நுழைவுவாயில் கட்டுவதில் மோதல்: 6 பேர் மீது வழக்குப்பதிவு; வீடியோ வைரல்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:26:34 PM (IST)

வள்ளியூர் அருகே கிறிஸ்தவ தேவாலய நுழைவுவாயில் கட்டுவதில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கீழவனேரியில் புனித அன்னம்மாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் தூத்துக்குடி மறை மாவட்டத்துடன் இணைந்தது. இந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் இந்த ஆலயம் 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனை முன்னிட்டு, ஆலயத்தின் முன்பாக பங்கு நூற்றாண்டு விழா நுழைவுவாயில் கட்ட சமீபத்தில் நடைபெற்ற பங்கு பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தரப்பினர் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை திருப்பலி முடிந்தவுடன் ஒரு தரப்பினர் நுழைவுவாயில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்ட ஏற்பாடு செய்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நுழைவுவாயில் அமைக்கப்பட்டால் தேர் பவனி செல்வதற்கு இடையூறாக இருக்கும் என்று அவர்கள் வாதிட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது. ஏராளமான ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தேவாலய வளாகத்தில் இரு தரப்பினர் மோதிக் கொண்டதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த வள்ளியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மது போதையில் ஆட்டோ ஓட்டி 5 பள்ளி மாணவர்கள் காயம் : ஓட்டுநர் மீது கடும் பிரிவில் வழக்கு
புதன் 18, பிப்ரவரி 2026 5:53:22 PM (IST)

இந்தியத் துறைமுக வரலாற்றில் மைல்கல்: வ.உ.சி. துறைமுக ஆணையம் சார்பில் ஏஐ அமர்வு!
புதன் 18, பிப்ரவரி 2026 5:22:09 PM (IST)

திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவி மீதே தாக்குதல்: காவல்துறைக்கு இபிஎஸ் கண்டனம்!
புதன் 18, பிப்ரவரி 2026 3:41:47 PM (IST)

நடுரோட்டில் கொதிக்கும் எண்ணெய்.. ஆக்கிரமிப்பு பிடியில் விளாத்திகுளம் சாலைகள்: கிராம மக்கள் அவதி!
புதன் 18, பிப்ரவரி 2026 3:22:22 PM (IST)

நீதிமன்றத்தில் அண்ணாமலை குறுக்கு விசாரணை: 2 கப்பல்கள் வாங்கியதை ஒத்துக்கொண்ட டி.ஆர்.பாலு!
புதன் 18, பிப்ரவரி 2026 11:29:00 AM (IST)

ஆட்சியில் பங்கு என்பது குறித்து தலைமையிடம் ஏற்கெனவே பேசிவிட்டேன்: மாணிக்கம் தாகூர்
புதன் 18, பிப்ரவரி 2026 11:20:32 AM (IST)

