» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
த.வெ.க. வெற்றி பெற்றால் நாசரேத்தில் ஐ.டி. பார்க்: பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேச்சு!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 7:59:00 AM (IST)

தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றால் நாசரேத்தில் ஐ.டி. பார்க் அமைக்கப்படும் என்று கட்சியின் 3-ஆம் ஆண்டு உதய தின விழா பொதுக்கூட்டத்தில் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார்.
நாசரேத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) 3-ஆம் ஆண்டு உதய தின விழாவை முன்னிட்டு மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்து உரையாற்றினார்.
நாசரேத் சீரணிக் கலையரங்கில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்திற்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் பிரைட்டர் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் சுதர்சன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் விஜய் ஆனந்த், பொருளாளர் சிவகுமார், ஆழ்வை ஒன்றியச் செயலாளர் ஆசீர் ராஜகுமார், மாவட்டத் துணைச் செயலாளர்கள் சுபத்ரா முருகன் மற்றும் ஜெகன் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் துணைச் செயலாளர் அப்பலோஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் தேர்தல் அறிக்கை குழு உறுப்பினரும், பெருந்தலைவர் காமராஜரின் பேத்தியுமான மயூரி காமராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியதாவது: "தமிழகத்தில் பெரியாரை கொச்சைப்படுத்தும் சீமானை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். வரும் தேர்தலில் விசில் அடித்து ஆளுங்கட்சியை மக்கள் விரட்ட வேண்டும்.
கடந்த 25 ஆண்டுகளாக அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் இந்தத் தொகுதியின் வளர்ச்சிக்கு எவ்வித உருப்படியான திட்டங்களையும் செய்யவில்லை. நாசரேத்தில் மூடப்பட்ட ஸ்பின்னிங் மில்லைத் திறக்கவோ அல்லது மாற்று நடவடிக்கை எடுக்கவோ அவர் முயற்சி செய்யவில்லை.
கனோன் ஆர்தர் மர்காஷிஸ் தொடங்கிய 'ஆர்ட் இண்டஸ்ட்ரியல்' பள்ளியை அரசு நிதி ஒதுக்கீடு மூலம் பாதுகாக்கத் தவறிவிட்டனர். தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், பூட்டப்பட்டுள்ள ஸ்பின்னிங் மில் இருந்த இடத்தில் மென்பொருள் பூங்கா அமைக்கப்படும். மேலும், நாசரேத் நகரம் 'ஸ்போர்ட்ஸ் சிட்டி' ஆக அறிவிக்கப்பட்டு மேம்படுத்தப்படும் என்றார்.
இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் ராஜா போஸ், மைதீன் அப்துல்காதர் மற்றும் பல்வேறு பேரூர் கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் நீதிபாலன் கார்த்திக் உள்ளிட்ட த.வெ.க தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் இறுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிறைவாக நகரச் செயலாளர் சுதர்சன் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியத் துறைமுக வரலாற்றில் மைல்கல்: வ.உ.சி. துறைமுக ஆணையம் சார்பில் ஏஐ அமர்வு!
புதன் 18, பிப்ரவரி 2026 5:22:09 PM (IST)

திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவி மீதே தாக்குதல்: காவல்துறைக்கு இபிஎஸ் கண்டனம்!
புதன் 18, பிப்ரவரி 2026 3:41:47 PM (IST)

நடுரோட்டில் கொதிக்கும் எண்ணெய்.. ஆக்கிரமிப்பு பிடியில் விளாத்திகுளம் சாலைகள்: கிராம மக்கள் அவதி!
புதன் 18, பிப்ரவரி 2026 3:22:22 PM (IST)

நீதிமன்றத்தில் அண்ணாமலை குறுக்கு விசாரணை: 2 கப்பல்கள் வாங்கியதை ஒத்துக்கொண்ட டி.ஆர்.பாலு!
புதன் 18, பிப்ரவரி 2026 11:29:00 AM (IST)

ஆட்சியில் பங்கு என்பது குறித்து தலைமையிடம் ஏற்கெனவே பேசிவிட்டேன்: மாணிக்கம் தாகூர்
புதன் 18, பிப்ரவரி 2026 11:20:32 AM (IST)

தேவாலய நுழைவுவாயில் கட்டுவதில் மோதல்: 6 பேர் மீது வழக்குப்பதிவு; வீடியோ வைரல்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:26:34 PM (IST)


மிஷனரிFeb 16, 2026 - 03:52:42 PM | Posted IP 172.7*****