» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அன்புமணிதான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்: தலைமை தேர்தல் ஆணையம்..!
திங்கள் 9, பிப்ரவரி 2026 5:27:33 PM (IST)

ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணிதான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மன்றும் அவரது மகன் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, பாமக தலைவராக 2026ம் ஆண்டு ஆகஸ்ட் வரை அன்புமணி ராமதாஸ் தொடர்வார் என்ற பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
இதனால், பாமக பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவை அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு சொந்தமானது. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தி ல் ராமதாஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில் அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் முடிவெடிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியது. இது ராமதாஸ் தரப்பிற்கு சாதமான தீர்ப்பாக அமைந்தது.
இதனிடையே, பாமக உட்கட்சி விவகாரம் குறித்த வழக்கில் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தி ல் தலைமை தேர்தல் ஆணையம் மறுசீராய்வு மனு செய்தது.
இந்நிலையில், இந்த சீராய்வு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆவணங்கள் அடிப்படையில் பாமக தலைவர் அன்புமணிதான் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தி ல் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாமகவில் பிரச்சினை ஏற்படுவதற்கு முன்பு தங்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்துள்ளோம் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தி ல் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்படாத கட்சிகளில் உட்கட்சி பிரச்சினை எழுவதற்கு முன்பு தரப்படும் ஆவணங்களில் அடிப்படையில் அதாஇ அங்கீகரிக்க தங்களுக்கு அதிகாரம் உள்ளது என்ற தலைமை தேர்தல் ஆணையத்தின் வாதத்தை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாடா ஆலையில் தயாரான முதல் கார் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 5:40:59 PM (IST)

கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 9, பிப்ரவரி 2026 4:18:01 PM (IST)

தகுதியற்ற நிலையில் உள்ள அரசுப் பேருந்தை மாற்ற நடவடிக்கை : ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை !
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:53:19 PM (IST)

கொடிக் கம்பங்கள் வழக்கு: தூத்துக்குடி, நெல்லை உட்பட 13 மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவு
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:48:37 PM (IST)

வானவில் போல தமிழக வெற்றி கழகமும் மறைந்து விடும்: கடம்பூர் செ. ராஜூ பேச்சு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:16:01 PM (IST)

உடலில் பாட்டில்களைக் கட்டிக்கொண்டு ஆட்சியர் அலுவலகம் வந்த சமூக ஆர்வலரால் பரபரப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 12:48:10 PM (IST)

