» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சாயர்புரத்தில் ரூ.1.67 கோடியில் புதிய பேருந்து நிலையம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
சனி 7, பிப்ரவரி 2026 3:11:28 PM (IST)

சாயர்புரத்தில் ரூ.1.67 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரத்தில் ரூ.1.67 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். சாயர்புரத்தில் நடைபெற்ற விழாவில் பேரூராட்சி தலைவர் அ.பாக்கியலெட்சுமி தலைமை வகித்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார். திருநெல்வேலி பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கிறிஸ்டோபர் தாஸ், தூத்துக்குடி மாவட்ட உதவி செயற்பொறியாளர் ஹரிகரன், சாயர்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் திருவைகுண்டம் மத்திய ஒன்றிய கழக செயலாளர் பி.ஜி.ரவி, தெற்கு மாவட்ட தி.மு.க துணை செயலாளர் ஜெபதங்கம் பிரேமா, சாயர்புரம் நகர தி.மு.க செயலாளர் கண்ணன், பெருங்குளம் நவநீத முத்துக்குமார், சாயர்புரம் முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் த.அறவாழி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராமமூர்த்தி, பொருளாளர் பத்திரகாளிமுத்து, ஒப்பந்ததாரர் ஜெ.பிரேம் இம்மானுவேல், தெற்கு மாவட்ட முன்னாள் காங். தலைவரும் பேரூராட்சி கவுன்சிலருமான எஸ்.வி.பி.எஸ்.பொ.ஜெயக்குமார், வட்டாரத் தலைவர்கள் ஜெயசீலன் துரை, சொரிமுத்து பிரதாபன், பேரூராட்சி துணை தலைவர் பிரியா மேரி, கவுன்சிலர்கள் கிறிஸ்டோபர், இந்திரா, பிரவீனா, பிளாட்டினா மேரி, முத்துமாரி, அமுதா, சுமதி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மிகப் பெரிய முறைகேட்டை மறைக்க டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து? விஜய் கேள்வி
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 7:39:54 PM (IST)

கொள்கையற்ற கூட்டத்துக்கு தக்க பதிலடி தரப்படும்! துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 2:29:41 PM (IST)

தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 10:43:51 AM (IST)

தூத்துக்குடி மழை பாதிப்பில்லா மாநகராக மாற்றம்: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 9:12:34 AM (IST)

தேசிய கல்விக் கொள்கையை அரசியல் செய்யும் திமுக : பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம்!
சனி 7, பிப்ரவரி 2026 9:39:23 PM (IST)

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது : நெல்லையில் பரபரப்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:40:09 PM (IST)

