» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அப்போலோ மருத்துவமனையில் ஹெச்.ராஜா சிகிச்சை: முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரிப்பு
திங்கள் 2, பிப்ரவரி 2026 10:19:04 AM (IST)

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உடல்நலம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
சென்னை: பாஜக மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச்.ராஜா (68), கடந்த 30-ம் தேதி சென்னையில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்றபோது, திடீரென மயங்கி விழுந்தார்.உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடும்பத்தினர், நண்பர்களுடன் பேசக்கூடிய வகையில் அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவமனைக்கு நேற்று வந்த முதல்வர் ஸ்டாலின், அங்கு சிகிச்சை பெற்று வரும் ஹெச்.ராஜாவின் உடல்நலம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார்.அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார். தொடர்ந்து, அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குளித்தலை திமுக எம்எல்ஏ ஆர்.மாணிக்கத்தையும் சந்தித்து உடல்நலம் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:43:26 PM (IST)

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:14:03 PM (IST)

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)