» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூரில் தைப்பூசத் திருவிழா கோலாகலம் : லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!
ஞாயிறு 1, பிப்ரவரி 2026 2:20:54 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
சூரபத்மனை வதம் செய்வதற்கு முருகப்பெருமான் வேல் வாங்கிய விழாவாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
இன்று மதியம் உச்சிக்கால தீபாராதனை முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்தபெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு சென்று, அங்கு வைத்து சுவாமிக்கு அபிஷேக, அலங்காரமாகி, தொடர்ந்து சுவாமி தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு திருக்கோயில் சேர்ந்தார்.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே தென் மாவட்டங்களிலிருந்து விரதமிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோயிலுக்கு காவடி எடுத்தும் அலகு குத்தியும் முருகர் பக்தி பாடல்களை ஆடி, பாடி வழிபட்டனர். இதனால், திருக்கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய்மைப் பணியாளரின் நேர்மையை பாராட்டி தங்கச் சங்கிலியை பரிசளித்த ரஜினிகாந்த்..!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:40:48 PM (IST)

பாஜக தேர்தல் சுற்றுப் பயண பொறுப்பாளர் பணியிலிருந்து அண்ணாமலை திடீர் விலகல்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 11:48:54 AM (IST)

எத்தனை சக்திகள் வந்தாலும் தி.மு.க.வை வீழ்த்த த.வெ.க.வால் மட்டுமே முடியும்: விஜய் பேச்சு!
திங்கள் 2, பிப்ரவரி 2026 4:00:39 PM (IST)

தமிழ் மொழியின் அருமையை தூக்கிப்பிடிப்பது நம் கடமை: நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்
திங்கள் 2, பிப்ரவரி 2026 3:51:53 PM (IST)

மத்திய பட்ஜெட்டால் தமிழ்நாட்டின் சிறு தொழில்கள் அதிகம் பயன்பெறும்: எடப்பாடி பழனிசாமி
திங்கள் 2, பிப்ரவரி 2026 12:34:28 PM (IST)

தங்கம் விலையில் அதிரடி சரிவு: கிராமுக்கு ரூ.950 குறைந்து... வெள்ளி விலையும் குறைந்தது!
திங்கள் 2, பிப்ரவரி 2026 11:51:30 AM (IST)

