» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சட்டசபையில் இருந்து வெளியேறியது ஆளுநர் பதவிக்கு அழகல்ல: ஸ்டாலின் கண்டனம்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 12:25:01 PM (IST)
சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறியது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சட்டசபைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மலர்க்கொத்து, கலைஞர் மு.கருணாநிதி வரலாறு புத்தகத்தை கொடுத்து சபாநாயகர் அப்பாவு வரவேற்றார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியது. சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் உரையை படிக்காமல் இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். 4-வது ஆண்டாக இந்த ஆண்டும் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறியதால் சற்றுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
சட்டசபையின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை, என்னை அவமதித்து விட்டீர்கள் எனக்கூறி ஆளுநர் வெளியேறினார். அப்போது, அமைச்சரவை எழுதி கொடுத்ததை படிக்க வேண்டும். சட்டசபை மரபை ஆளுநர் மீற வேண்டாம் என சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் மக்கள் சபையை ஆளுநர் அவமதித்துள்ளதாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: சட்டசபையில் இருந்து வெளியேறியது ஆளுநர் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. உரையை வாசிக்காமல் சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறியதை பேரவை ஏற்கவில்லை.
ஆளுநரின் நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயல். ஆளுநர் மக்கள் நலனில் அக்கறை உள்ளவராக இருக்க வேண்டும். பா.ஜ.க. ஆளாத மாநில அரசுகளுக்கு இடையூறாக இருப்பது ஆளுநர்களின் வாடிக்கையாக உள்ளது. அமைச்சரவை எழுதி அனுப்பிய உரையை மட்டுமே ஆளுநர் படிக்க வேண்டும். பொது மேடைகளில் அரசியல் பேசி அவதூறு பரப்பி வருகிறார் ஆளுநர் என்று பேசினார்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்கள் மனதில் முதல்வர் ஸ்டாலின்: திமுகவில் இணைந்தது குறித்து வைத்திலிங்கம் விளக்கம்!!
புதன் 21, ஜனவரி 2026 11:16:21 AM (IST)

ஜனநாயகன் ரிலீஸ் மேலும் தாமதம்: தணிக்கை சான்றிதழ் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு!
புதன் 21, ஜனவரி 2026 8:28:12 AM (IST)

நெல்லை அருகே கூட்டம், கூட்டமாக வலசை வந்த வெளிநாட்டு பறவைகள்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:03:08 PM (IST)

சகிப்பின்மைக்கு இடமில்லை: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கனிமொழி எம்.பி. ஆதரவு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:11:07 PM (IST)

அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை வாசிப்பது ஆளுநரின் கடமை: சபாநாயகர் அப்பாவு
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:53:55 PM (IST)

தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் : 600பேர் கைது
செவ்வாய் 20, ஜனவரி 2026 12:35:56 PM (IST)