» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் காணும்பொங்கல் கோலாகலம் : கடற்கரை, பூங்காக்களில் குவிந்த பொதுமக்கள்!
சனி 17, ஜனவரி 2026 8:28:24 AM (IST)

தூத்துக்குடியில் காணும் பொங்கலை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். கடற்கரை, பூங்காக்களில் கூட்டம் அலைமோதியது.
தூத்துக்குடியில் காணும் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநகர பகுதியில் உள்ள அனைத்து பூங்காக்களையும் மாநகராட்சி நிர்வாகத்தினர் தூய்மைப்படுத்தி வைத்திருந்தனர். வழக்கம் போல் இப்பண்டிகைக்கு நேற்று வ.உ.சி துறைமுகம் அருகே உள்ள முயல் தீவுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அந்த தீவுக்கு செல்ல ஆர்வமாக இருந்த ஏராளமான பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அதேசமயம், தூத்துக்குடி ரோச்பூங்கா, முத்துநகர் கடற்கரை பூங்காவுக்கு காலை முதல் பொதுமக்கள் கூட்டமாக குவிய தொடங்கினர். நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காணப்பட்டது. பூங்காவின் ஓரத்தில் தற்காலிக கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டு இருந்தன. பூங்காவிற்கு சிறுவர்கள், குழந்தைகளுடன் திரளாக வந்த பொதுமக்கள், ஊஞ்சல், சறுக்கு போன்றவைகளில் ஏறி விளையாடி மகிழ்ந்தனர்.
கடற்கரையில் சிறுவர்கள் பட்டம் விட்டு உற்சாகமாக காணப்பட்டனர். மேலும் பொதுமக்கள் கொண்டு வந்த சாப்பாடு, பனங்கிழங்கு, கரும்பு போன்ற தின்பண்டங்களை உண்டு மகிழ்ந்தனர். முத்துநகர் கடற்கரை பூங்காவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஏராளமான வாகனங்களில் சென்று குவிந்ததால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தூத்துக்குடி துறைமுக கடற்கரையில் காலை முதலே இளைஞர்கள், பெரியவர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கூட்டம் கூட்டமாக வர தொடங்கினர். இதனால் அந்த கடற்கரையும் மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது. இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் கடலில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். காணும் பொங்கலையொட்டி துறைமுக கடற்கரையில் தற்காலிகமாக உணவு கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த கடைகளில் உள்ள பொருட்களை பொதுமக்கள் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தனர். மேலும் பீச் ரோட்டில் உள்ள படகு குழாமில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
இதேபோன்று தூத்துக்குடி யில் உள்ள ராஜாஜி பூங்காவில் மக்கள் கூட்டமாக குடும்பத்துடன் அங்கு உள்ள மரங்களுக்கு கீழே அமர்ந்திருந்து தாங்கள் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்டனர். அங்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் பூங்காவிற்கு முன்பு தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு சிறுவர்-சிறுமியருக் கான விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. அங்கு உள்ள விளையாட்டு பொருட்களை சிறுவர்-சிறுமியர் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் மேற்பார்வையில் கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் துணை கண்காணிப்பாளர் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்வது போன்றவற்றை கட்டுப்படுத்த ஆங்காங்கே இரும்பு தடுப்புகள் வைத்து போலீசார் கண்காணித்தனர். குற்றசெயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க ஆண் மற்றும் பெண் போலீசார் மப்டியில் ரோந்துப் பணியும் மேற்கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள்: அடுத்த மாதம் 17-ஆம் தேதி இறுதி பட்டியல்!!
ஞாயிறு 18, ஜனவரி 2026 9:34:05 AM (IST)

கல்லால் தாக்கி வங்கி ஊழியர் உள்பட 2 பேர் கொடூரக் கொலை: கஞ்சா போதை ஆசாமிகள் வெறிச்செயல்
ஞாயிறு 18, ஜனவரி 2026 9:26:09 AM (IST)

ஜனநாயகன் படம் வெற்றிகரமாக வெளிவரும்: ஜீவா பேட்டி
ஞாயிறு 18, ஜனவரி 2026 9:03:49 AM (IST)

திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் விலை உயா்வு: கூட்டம் அலைமோதல்!
ஞாயிறு 18, ஜனவரி 2026 8:25:24 AM (IST)
_1768652448.jpg)
ஆண்களுக்கு இலவச பஸ் பயணம் யாராவது கேட்டார்களா? சீமான் விமர்சனம்!
சனி 17, ஜனவரி 2026 5:51:10 PM (IST)

ஆத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் காளை முட்டி பெண் உள்பட 2 பேர் பலி!
சனி 17, ஜனவரி 2026 5:40:14 PM (IST)

